சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029 : தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் :
1030- 1040
(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
- Thermometer – அனற்கோல்
அனலின் அளவை நமது உறுப்புகளின் உணர்ச்சியால் பிழையின்றி அறிய முடியுமா? முடியாது. மிகவும் சூடாகவுள்ள நீரிலும், குளிர்ந்த நீரிலும் நமது கைவிரல் வைத்து உணர்வோமானால், ஒன்று ஒன்றைவிட சூடாக உள்ளதா, தன்மையாக உள்ளதா என்று உணர முடியுமே ஒழிய, எந்த அளவுக்கு அவை அனலைப் பெற்றுள்ளன. அவைகளின் அனல் நிலை (Temperature) என்ன என்பவற்றைச் சரியான முறையில் தெரிந்து கொள்ள முடியாது. இம்மாதிரியான சிக்கல்கள் மனிதனை மேலும் எண்ணத் தூண்டியது. - சிரீலசிரீ – உயர்சீர்த்தி (1956)
நல்லவராய் வாழ்க!
உயர் சீர்த்தி குன்றக்குடி அடிகளாருக்கு
குறிப்பு : உயர்சீர்த்தி – இச்சொல் சிரீலசிரீ என்பதைச் சுட்டும் பழந்தமிழ்ச் சொல்.
கா. சம்பத்து
மதுக்கூர் (1956)
★ - வாக்கியம் – சொற்கூட்டம்
சொற்கள் தொடர்ந்து நின்று, முடிவு பெற்ற கருத்து ஒன்றினைத் தெரிவித்தால், அச்சொற் கூட்டம் வாக்கியம் ஆகும். அதனை, வசனம் என்றும் சொல்வதுண்டு.
நூல் : பயிற்சித் தமிழ் (1956) (இரண்டாம் பாகம்), பக்கம் : 1
நூலாசிரியர் : தென் புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை
★ - பஞ்சாட்சரம் – அஞ்செழுத்து
அஞ்செழுத்து என்பவர் சிறந்த கவிஞர். இவருக்குப் பஞ்சாட்சரம் என்று பெற்றோர் பெயரிட்டனர். அப்பெயரை மாற்றி அஞ்செழுத்து என்று 1957ஆம் ஆண்டில் இவர் வைத்துக் கொண்டார்.
வளனரசு (1957)
★ - அபேட்சகர் – வேட்பாளர் (1957)
நூல்களைத் தேடிவாங்கிப் படிக்கும் ஆர்வலர், நூலகத்தும்பி, அறிவுத் தேனி
ஊ. செயராமன்
★ - லிப்சுடிக்(கு) – செந்நிறக்குச்சி
- கொவ்வை – உதடுகளைக் குறிக்கும்
செந்நிறக் குச்சி ஒன்றால்
சிவப்பேற்றி மெருகிட்டு
எச்சிலோ, நாக்கோ
இடறிப் படாவண்ணம்
மிக்க கருத்துடனே
அதைக் காப்பர்
இதழ் : எழிலன் கவிதைகள் (1957) பக்கங்கள் 19, 20
நூலாசிரியர் : வலம்புரி எழிலன்
★ - ஆர்வகர் சங்கம்
சினிமா இரசிகர்கள் சங்கத்தை, “விசிறிகள் சங்கம்’ என்றோர், ரசிகர் சங்கம் என்றோ அழைப்பதை விட ஆர்வகர் சங்கம் என்று அழைக்கலாம்.
முனைவர் ஏ.சி. செட்டியார் (19. 6. 1960) - காளி – கருநிறமுடையவள்
- துருவன் – அழிவில்லாதவன்
- வேதனம் – அறிவு
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply