(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 904- 910


(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. ச(ஜ)லசந்தி – நீரிணை
    கொத்தரில் ஒருபாலார் பாசுபரசு நீரிணை வழியால் நுழைந்து கிரேக்க நாட்டிற் புகுந்து ஏதென்சு நகரைத் தாக்கினர். அவர்கள் நகரத்து நூல் நிலையத்திற்குத் தீயிடவெண்ணினராக, கொத்தர் தலைவன் கற்றிலனாயினும், நூல்களை எரிக்கப்படாதெனத் தடுத்தான்.
    இதழ் : செந்தமிழ் – சூன், சூலை 1940, தொகுதி : 37
    கட்டுரை : யவனர் வரலாறு – பக்கங்கள் -368, 369
    கட்டுரையாளர் : த. இராமநாதபிள்ளை, பி.ஏ., (இலண்டன்)
  2. விலாசம் – விளிநிலை
    எழுதுபவர் விளிநிலை (விலாசம்) கடிதத்தின் தலைப்பில் இடது புறத்தில் அமைதல் வேண்டும். முழு விளி நிலையையும் எழுதினால்தான் எழுதியவர் இன்னாரென்று எளிதில் அறிதற்கும், பதிலைக் கடிதம் எழுதியவர்க்கே தடையின்றிச் சேரச் செய்வதற்கும் இயலும்.
    நூல் : தமிழ்க் கற்பிக்கும் முறை (1940), பக்கம் – 42
    நூலாசிரியர் : சி. இலக்குவனார்
    ⁠(தமிழாசிரியர், கழக உயர்தரக் கல்விக்கூடம், நன்னிலம்)
  3. கும்பாபிசேகம் – குடமுழுக்கு
    தமிழ்நாட்டில் வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோண (அரண் குன்ற)த்திற்கு அடுத்த மோசூர் என்னும் ஊரிலுள்ள தமிழராகிய அன்பர்கள், கருங்கல்லால் புதியதாக ஒரு கோயில் கட்டி முடித்துப் பிள்ளையார் படிவத்தினை அதில் அமைத்து வெகுதானிய ஆண்டு வைகாசித் திங்கள் 27ஆம் (1938 ஜூன் 9ஆம் நாளாகிய வியாழக்கிழமை குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடாத்தி வைததனா்.
    நூல் : மோசூர் ஆலடிப் பிள்ளையர் புகழ்ப் பத்து, பக்கம் : 1
    மூலமும் உரையும் (1940)
    நூலாசிரியர் : மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர்.,
    ⁠(பச்சையப்பன் கல்லூரி)
  4. Conversation – சொல்லாடல்
    சொல்லாடல் (Conversation)முறையில் கட்டுரைகளை எழுதச் செய்யின், ஒரு பொருளைப் பற்றித் தாமே வினவி அதன் முழு வரலாற்றையும் அறியும் திறன் பெறுவதோடு ஆராய்ச்சியறிவும் நாடகம் எழுதும் வன்மையும் பெற்றவர்களாவார்கள்.
    நூல் : தமிழ்க் கற்பிக்கும் முறை (1940), பக்கம் : 41
    நூலாசிரியர் : வித்துவான் சி. இலக்குவனார்
    (தமிழாசிரியர், கழக உயர்தரக் கல்விக்கூடம், நன்னிலம்)
  5. Badge – அடையாளப் பதக்கம்
    ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர் உண்டு. அத்தலைவர், அவ்வப் பிரிவினருக்கு உரிய பாகங்களைக் கற்பிப்பர்; அவற்றில் பரீட்சையும் வைப்பர். அதில் தேறுபவர்களுக்கு அப்பிரிவின் அடையாளப் பதக்கம் (Badge) கொடுப்பர்.
    நூல் : மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் – 81
    நூலாசிரியர் : வித்துவான் பாலூர் து. கண்ணப்ப முதலியார்
    ⁠(தமிழ் ஆசிரியர், முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)
  6. ஒரு மாதப் பத்திரிக்கை – ஒரு மதிமுகத்தாள்
    தாய்மொழி தழைக!⁠ தாயகம் வாழ்க!!
    தமிழணங்கு – ஒரு மதிமுகத்தாள்
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
    மலர் – 1 இதழ் – 9 (1941)
    ஆசிரியர் : ஆ.மா. சிவஞானம், தமிழரண், ஆம்பூர்
    ⁠(பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்)

  1. Fade – மறைந்து தெளிதல்
    (Fade) அல்லது மறைந்து தெளிதல் என்ற வழிகதைப் போக்கில் இன்னும் அதிக வித்தியாசத்தைக் குறிப்பதற்கு அனுசரிக்கப்படுகிறது.
    சித்திரவாணி
    இதழ் : சினிமா உலகம் (16 .11 .1941)
    ⁠படம் : 7; காட்சி ; 32; பக்கம் , 13

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்