(தமிழ்ச்சொல்லாக்கம்  133 – 137 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

138. Great world’s Fair – உலகத்துப் பெருஞ்சந்தை

இந்துமதத்தையும் இந்துக்களின் தத்துவ ஞானத்தையும் பிற தேசங்களிலுள்ளவர்ளுக்குக் கற்பிக்க வேண்டுமென்ற அவா இவருக்கு மிக விருந்தது. இவ்வெண்ண மேற்கொண்டு 1893 ஆம் வருடத்தில் இந்தியாவினின்றுங் கிளம்பி அமெரிக்கா கண்டத்தை நோக்கிச் சென்றார். சிக்காகோ என்னும் நகரத்தையடைந்து ஆங்கு நடந்த ‘உலகத்துப் பெருஞ்சந்தை’ (Great World’s Fair)க்குச் சென்றனர். உலகத்திலுள்ள மதங்கட்கான சபையில் இவரை இந்து மதத்திற்கும் வேதாந்த நிலைமைக்கும் பிரதிநிதியாக அங்குள்ளர் ஒப்புக் கொண்டனர். 1894ஆவது வருடம் முழுவதும் ஆங்காங்குப் பிரசங்கங்கள் செய்தனர். 

நூல் : மகாசன மண்டலி (1904) பக். 3637)

நூலாசிரியர் : டி.ஏ. சுவாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்)

139. TRANSLATER – மொழிபெயர்ப்பாளர்

முதன்முதலில் அவர் செங்கற்பட்டுக் கலெக்டர் ஆபீசில் டிரான்சுலேட்டராய் (மொழிபெயர்ப்பவராய்) அமர்ந்தார். படிப்படியாய் உத்தியோகத்திலுயர்ந்து. சீக்கிர காலத்திலேயே நெல்லூர் சில்லாவிற் பிரதான சிரேசுதேதாராயினர்.

மேற்படி நூல் : பக் 155

140. Mortgage – பொந்தகம், ஒற்றி

Mortgage பெந்தனம், ஒற்றியென்பவை முறையே பெந்தகம், ஒத்தியென வழக்கச் சொற்களாகிவிட்டன. இவைகளைப் பற்றி இங்கிலிசு கவர்ண்மெண்டார் 1798-௵லத்திய 1-ஆவது ரெகுலேசன், என்றும், 1806-௵லத்திய 17-ஆவது ரெகுலேசன் என்றும், இருவகைச் சட்டங்கள் ஆதியில் ஏற்படுத்தியிருந்தார்கள்.

இதழ் :           விவகார போதினி (1904) புத்தகம் – 1 இலக்கம் – 1, பக், 12

ஆசிரியர்    :           எ. நடேசபிள்ளை (திருவாரூர் டிசுட்ரிக்ட் முன்சீப் கோர்ட்டு பிளிடர்)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்