தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 12- 20
(தமிழ்ச்சொல்லாக்கம் 8-11 தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
- அந்தக் கரணம் – உட்கருவி
பூமியென்னுங் கற்பக விருட்சத்தினது யெளவன மென்னும் நறும் புட்ப மஞ்சரி, மங்கையரது அந்தக் கரணங்களாகிய (உட்கருவிகள்) வண்டுகளை ஆகருசிக்கின்றமை சகசமே.
நூல் : வில்கணீயம் (1875) பக்கம் 10
மொழி பெயர்ப்பாளர் : (யாழ்ப்பாணத்துப் புயோலி) மகாவித்துவான் வ. கணபதிப்பிள்ளை
★
- சித்தப்பிரமை – அறிவு மயக்கம்
இது முகமன்று, முயற்களங்கமின்றிய சந்திரனே! இவை தனங்களல்ல, பூரண அமிர்த கும்பங்களே! இது அளகபந்தியன்று, காமாயுத சாலையே! இவை நேத்திரங்க ளல்ல, யெளவன புருசர்களைப் பந்திக்கும் விலங்குகளே! அந்தகார சமூகமும், சந்திர பாகமும், இந்திர வில்லும், இரு நீலோற்ப மலரும், பதும புட்பமும், சங்கும், சுவர்ண கும்பங்களிரண்டும், ஆலிலையும், மின்னலும், இரண்டு வாழைத்தண்டும், எவ்வாறோ ஒன்றாய்ச் சேர்ந்து எனக்குச் சித்தப்பிரமையை (அறிவு மயக்கம்) உண்டாக்கி மதனபீடை சனிப்பிக்கன்றன.
- சுதினம் — நல்ல நாள்
- தர்ப்பணம் — கண்ணாடி
- அந்தகாரம் — இருள் சின்னம், அடையாளம்
- சாரங்கம் — வில்
- சித்தப்பிரமை— அறிவு மயக்கம்
- மதன பீடை — காம நோய்
- ஃச்படிகம் — பளிங்கு
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
வணக்கம். உங்கள் இணைய பக்கங்களைப் பார்த்தேன்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.