(தமிழ்ச்சொல்லாக்கம்: 316- 320 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 321- 324

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

குறிப்பு : கவிஞர் சுரதா அவர்கள் நூல்களிலும் இதழ்களிலும் இடம் பெற்ற மொழி மாற்றச்சொற்களைத்தொகுத்துத்தந்துள்ளார். ஆனால், பின்வரும் பத்திகளில் குறிப்பிட்டனவற்றிற்கான தமிழ்ச்சாெற்கள் குறிப்பிடப்படவில்லை. நூலில் விடுபட்டதா?அல்லது வேறு நோக்கில் சேர்த்துள்ளாரா என்றும் புரியவில்லை. எனினும் நூலில் உள்ளவாறு (கிரந்த எழுத்துகள்மட்டும் நீக்கிக்)கிழே தரப்பட்டுள்ளது. எழுத்துப்பிழைகளாகத் தெரிவனவற்றையும் திருத்தவில்லை.

321.

சூரியன், சிருட்டி தெளிந்தருளிய சிரீமது பஞ்சமுக விசுவப்பிரம்மாண்ட பிரம்மிதே சத்ரு சாகர பரியந்தம் தேவப்பிறாம்மனோப்யோ சுயம்பவந்து மாந்தூர் கிண்ணந்தூர்.

மாகா ஆசீர்வாதம் சம்பூர்ணம்

அ. பட்டனாச்சாரி அவர்கள் எழுதிய பஞ்சப்றம்ம கப்பல்

322.

பாறுலகில், ளமநுவிசுவப்றம்மா, தேசிகா, மனுவிசுவப்பிரம்மா பவுசுடனேசானகரிசி கோத்திரம் தேசிகா, இரிசிகோத்திரம் குசுதிரமா ஆசுவலாயணமா தேசிகா, ஆசுவ லாயணமா பபிரவரயாம் சத்துயோ சாதமது தேசிகா, சத்துயோ சாதமது, பண்புடனே அமுதரிந்த கார்முனைகள் ஏழு கப்பல், தேசிகா, ஏழுகப்பல், கலப்பை நாலுகப்பல் கூர்மையுள்ள எழுத்தாணி சந்திவி, தேசிகா எழுத்தாணி, குணமுடனே ஏழு கப்பல் சீருடனே ரிக்குவேதம் தேசிகா சிறந்தபடி, வேதபாறாயணமும் தேசிகா வேதபாறாயணமும்.

323.

அய்யும், ஓம குண்டமும், அவுபாசனமும், அநுக்கிரக சித்தியும் உருத்திரன் சிருட்டியும் தயவான மனுநீதியும் தண்டமிள் விளங்க அகராதி நன்னூலும் டொப்பிகளறுக்கவே கத்தியொரு கப்பல் துள்ளிபமான கூர்மண் வெட்டியும், பொர்பணிகள் போலவே வங்கிசமுதாடு புகளான கட்டாளி கன்றகோடாலி அப்பு வெளியாகவே பிக்காசு குந்தாளம், அடவுடனே வருகிறது அஞ்சாறுகப்பல் துப்பாக்கி பீரங்கி பன்னிரண்டு கப்பல் துட்டர்களை வெட்டவே கத்தி யொருகப்பல் குப்பரத்தள்ளி குத்தி மலத்தும் கூர்மையுள்ள ஈட்டி வேல் வல்லயமனந்தம் செப்பமுள கைதோட்டா, வெடிகளொருகப்பல் சீறானசுருட்டு கைபிடி அருவாள்.

324.

பற்பல ஆயுதம் அனேகங்களுண்டு பண்புடன் சொல்ல என்னாவு காணாது சொர்ப்பமாய் சொல்லுகிறேன் தந்தியொரு கப்பல் சுகம்னகெடிகாரம் முவெட்டு கோடி நிப்பரம் நிமிசத்தில் நூறுமயிலோடும் நேர்த்தியுள்ள இரயில்வண்டி முன்னூறு கப்பல் நாலஞ்சுகப்பல் தப்பமுடன் மிதிவண்டி ஒவ்வொரு கப்பல் தப்புகள்வறாமலே உயர்வான மோட்டார்கார் வண்டி யொருகப்பல் தப்புகள் வறாமலேறகங்ளெல்லாம் தானாகப்பாடுகின்ற புவனகறாப்பெட்டி கற்பகம் போலவே அரண்மனைகள் செய்ய கதவுநிலைக்கெல்லாம் கொப்புக்கன சில சாமான் அற்ப்புதமாய் மனுவேலை அளவிட்டு சொல்ல ஆதிசேடனாலும் முடியாது சாமி இப்படியே இவ்வளவும் ஏற்றுமதியாகி இனமான மாந்தை நகர் விட்டேகி வருகுதையா கப்பல் ஏலேலோ ஏலேலோ தேசிகா ஏலேலோ.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்