(தமிழ்ச்சொல்லாக்கம்: 342 – 344 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 345

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

 345. கலியாண சுந்தரம் – மணவழகு

1917இல் திசம்பர் மாதம் 24உ செம்பியத்தில் கூடிய மகாசமாசக் கூட்டத்தில் நடந்த தீர்மானங்கள்.

1. இவ்வருடத்து அறிக்கைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது.

2.

சிரீமான் – கி – குப்புச்சாமி முதலியார் அவர்கள் ஐந்து வருடமாகப் புரிந்த உதவிக்காக சமாசம் நன்றி பாராட்டுகின்றது.

சபைத்தலைவர்            :           சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபிரீ – கலியாண கந்தர யதீந்திர சுவாமிகள், சென்னை

உதவி சபைத் தலைவர் :           சிரீமான் செ.எம். நல்லசாமிப் பிள்ளையவர்கள், B.A.; B.C.; High Court Vakil, மதுரை

சிரீமான் T. நல்லசிவன் பிள்யைவர்கள், B.A., B.L., High Court Vakil சென்னை

காரியதரிசி       :           சிரீமான் கே. சுப்பிரமணியப் பிள்ளை. அவர்கள் எம்.ஏ., எம்.எல், பொக்கிதார் : சிரீரீமான் W.T. கோவிந்தராச முதலியார் அவர்கள், சென்னை

பத்திராசிரியர்   :           சித்தாந்த சரபம் -அட்டாவதானம் சிவசிரீ – கலியானசுந்தர யதீந்திரவர்கள் சென்னை (மணவழகு)

இதழ்   :           சித்தாந்தம் (1918) தொகுதி -7 பகுதி – 1 பக்கம் – 21, 22

 கலியாண சுந்தரம் – மணவழகு (1918) (மற்றொன்று)

ம-ள-ள -சிரீ சிரீபெரும் பூதூர் குமார வேலாயுத முதலியார் என்பவர் சிவானந்தச் செல்வராகிய தாயுமான சுவாமிகள் பாடலுக்கு ஒரு தக்கவுரை எழுதி யுபகரிக்கின் சஞ்சிகை ரூபமாக வெளிப்படுத்திக் கொள்வே னென, அவர் வேண்டுகோளுக் கியைந்து சைவாசார துல்யரான தாயுமான சுவாமிகள் திருவடித் தியானத்தால் திருவருளை முன்னிட்டு ஆசிரியர் இருதயத்துண்மை சூழ்ந்து, பர பிரம சூத்திரமாகிய சித்தாந்த மகா சூத்திரம் என்று அறிஞரானுய்த் தோதப் பெறுஉம் வடமொழிச் சிவஞான போத மொழி பெயர்ப்பாகிய தென்மொழிச் சிவஞான போதமாதி மெய்கண்ட சாத்திரங்கட்கும் திராவிட திராவிட மகா பாசியாதிகட்கும் இணங்கப் பலவரிய பெரிய சுத்தாத்துவித சித்தாந்த சாத்திரப் பிராமாணங்கள் எண்ணில காட்டி, மெய்கண்ட விருத்தியுரை என வொன்றியற்றினான்.

ஆன்மாவிற்கு இயற்கையாக வமைந்துள்ள திரோதானத்தால் ஏதாகிலும் மாறுபாடு விளைந்திருக்குமேல் முன்பின்னராய்ச்சியால் முறைப்படுத்தி வாசித்துக் கொள்ளும்படி சன்மார்க்கர்களை வந்தனத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றனன்.

சென்னைப் பட்டணம் 1918

– மணவழகு

கீலக ௵ கன்னி இரவி

நூல்      :           தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு முதலிய மூலமும் சித்தாந்த சரபம் அட்டாவதானம் பூவை – கலியாண சுந்தர முதலியார் மெய்கண்ட விருத்தியுரையும். பக்கம்-2

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்