(தமிழ்ச்சொல்லாக்கம்: 345 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 346-354

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

346. Tamil Cyclopedia – தமிழ்க் களஞ்சியம்

தமிழ்க்களஞ்சியம் (Tamil cyclopedia) இப்பெயர் கொண்ட நூலொன்று மாத சஞ்சிகையாக வெளிவருகிறது. பகுதி ஒன்று வெளி வந்தது. இதில் தமிழின் உற்பத்தி, தமிழின் தொன்மை, தமிழின் பதப்பொருள், தமிழ்ச்சிறப்பு (தமிழ் உயர்தனிச் செம்மொழி, தமிழ்த் தெய்வ பாஷை, தமிழ் மூலபாஷை) தமிழ்ச் சங்கம், தலைசங்கம் முதலிய விசயங்க ளடங்கியிருக்கின்றன. சஞ்சிகையொன்றுக்கு விலை அணா 8. வேண்டியவர்கள் சென்னை பிரம்பூர் தமிழ் சைக்ளோபீடியா ஆபீசுக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

இதழ்   :           சித்தாந்தம் (1918 சனவரி) தொகுதி 7, பகுதி-1 பக்கம், 16.

சொல்லாக்கம்  :           பூவை கலியாண சுந்தர முதலியார்

347. Double Pneumonia – அள்ளு மாந்தம்

என் குழந்தைகளில் 4 பிராயமுள்ள குழந்தை ஒன்றுக்கு அள்ளு மாந்தம் (Double Pneumonia) என்னும் கொடிய வியாதியால் வருந்தும் போது அவரது தேவி சித்த பூரணச் சந்திரோதயத்தின் பெருமையையும், அது அக்கொடிய வியாதியைக் குணப்படுத்தினதையும் முக்கியமாய்த் தெரிவிக்கப் பிரியப்படுகிறேன். இவரது சித்தவைத்தியத்தின் திறமையை என்னால் சொல்லத் திறமல்ல.

சி. ஆர். ஆதிகேசவலு (நாயுடு),

Shrodtriathar, Monicipal Commissioner

348. Weaver’s Loom – தறிமரம்

தறிமரம் : தறியின் மரம் (தறி = A weaver’s Loom)

நூல்      :           ரிப்பன் ஐந்தாம் வாசகப் புத்தகம் (1918) பக்கம் – 56

நூலாசிரியர்      :           தி. செல்வக் கேசவராய (முதலியா)ர். எம்.ஏ., (சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்)

349. Company – கூட்டம்

இங்க்லண்டிலிருந்து சில இங்க்லிசுகாரர் வருத்தகம் செய்யும்படி ஒரு கூட்டமாக (கம்பெனியாக) இந்தியாவுக்கு முதலில் வந்தனர். தங்கள் வருத்தகச் சரக்குகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் பொருட்டு அவர்கள் பொம்பாய், கள்ளிக்கோட்டை, சென்னை, கல்கத்தா முதலான பட்டினங்களில் கொஞ்சங் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கட்டிக் கொண்டார்கள்,

மேற்படி நூல் : ரிப்பன் ஐந்தாம் வாசகப் புத்தகம் (1918) பக்கம் -2

350. அனுசரன் —        ஏவற்காரன்

351. சந்திரசாலை        —        நிலா முற்றம்

352. சாரம்       —        பொருள், உள்ளீடு

353. பிரதாபம் —        மேன்மை

354. விமானம் —        ஏழடுக்கு வீடு

                        நூல்      :           மேகதூதக் காரிகை (1918) (காளிதாச மகாகவி)

மொழி பெயர்த்தியற்றியவர்     :           சுன்னாகம் அ. குமாரசுவாமி(ப் பிள்ளை)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்