தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 178- 196
(தமிழ்ச்சொல்லாக்கம் 169 – 177 தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
178. பாரகாவியம் – பெருநூல்
நூல் : திருவிளையாடற் புராண மூலமும் அரும்பதக் குறிப்புரையும் (1905)
குறிப்புரை : முத்தமிழ் இரத்னாகரம் ம. தி. பானுகவி வல்லி – ப. தெய்வநாயக முதலியார் சென்னை சிந்தாதிரிப் பேட்டை ஆங்கிலோ வருணகுலரி இசுகூல் தமிழ்ப் பண்டிதர்
★
179. புலித்தோலாசனம் – வேங்கையதள்
180. சோமவாரம் – மதிநாள்
181. சரசுவதி – வெள்ளைச் செழுமலர்ந்திரு
182. வியாக்கிரபாதன் – புலிக்காலோன்
183. ஆவிநாயகன் – உயிர்த்தலைவன்
184. மேடம் – தகர் (சித்திரை)
185. மகரம் – சுறவு (தை)
186. கடகம் – அலவன் (ஆடி)
187. தேவதச்சன் – கம்மியப் புலவன்
188. சூரிய வம்சம் – பரிதிமரபு
189. வெளிமார்க்கம் – புறத்துறை
190. சூரிய காந்தக்கல் – எளியிறைக்குங்கல்
191. சந்திர காந்தக்கல் – நீரிறைக்குங்கல்
192. இந்திரிய வழி – புலநெறி
193. சதுக்கம் – நாற்சந்தி
194. உத்தரீயம் – மேற்போர்வை
195. கசுதூரி – காசறை
196. அபிப்பிராயம் – உட்கோள்
நூல் : பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் (1905). அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் இரத்தினாகரம் ம. தி. பானுகவி வல்லி – ப. தெய்வநாயக முதலியார்
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply