(வெருளி நோய்கள் 1001-1005: தொடர்ச்சி)

சனவரி 31 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 31 வெருளி.
சனவரி 31 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 31 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
31 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 31 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் சனவரி வெருளி.
Yi என்னும் சீனச்சொல்லிற்கு முதல் எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, Yiyue முதல் மாதமாகிய சனவரியைக் குறிக்கிறது.
00

சனிக்கிழமை பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சனிக்கிழமை வெருளி.
சனிக்குறைமை(தோசம்) இருந்தது என்றால் தொழில்,இ உடல் நலம்இ நிதி தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கணியத்தை(சோதிடத்தை( நம்புபவர்கள் நம்புவார்கள். எனவே, இத்தகையோர் சனிக் கிழமை குறித்தும் சனிக்கோள் குறித்தும் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
Savvato என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சனிக்கிழமை எனப் பொருள்.
00

சனிக்கோள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சனிக்கோள் வெருளி.
சனிக்குறைமை(தோசம்) இருந்தது என்றால் தொழில்,இ உடல் நலம்இ நிதி தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கணியத்தை(சோதிடத்தை( நம்புபவர்கள் நம்புவார்கள். எனவே, இத்தகையோர் சனிக் கிழமை குறித்தும் சனிக்கோள் குறித்தும் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
சனிப்பிணம் தனிப்போகா்து என்ற சொலவடை இருப்பதால் சனியன்று ஏதும் துயரம் நிகழ்ந்தால் வெரளி கொள்வர்.
சனிப்பெயர்ச்சியில் தீங்கு நேர்ந்து பெருகும், ஏழரைச்சனியால் பெரும் துயரங்கள் ஏற்படும் என்று கவலைப்படுபவர்கபனங சனிக்கோள் மீது வெருளி கொள்வர்.
00

சாக்கடை நீர்(sewer water) பற்றிய அளவு கடந்த பேரச்சம் சாக்கடை நீர் வெருளி.
சாக்கடையில் இருந்து வரும் தீய நாற்றம், சாக்கடை மூலம் பரவும் நோய்கள் முதலியவற்றால் சாக்கடை நீர் மீது பேரச்சம கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
தீய என்னும் பொருள் காெண்ட “kakos” என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே “Caco *.
நீர் என்னும் பொருள் கொண்ட hýdōr என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Hydro
Cacohydro என்பது தீய நீராகிய சாக்கடை நீரைக் குறிக்கிறது.
00