வெருளி நோய்கள் 1306 -1310 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1301 -1305 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1306 -1310
- தீவுவெருளி-Insulaphobia / Isulaphobia
தீவுபற்றிய காரணமற்ற, தேவையற்ற பேரச்சமே தீவு வெருளி.
வாய் வாள்
வலம்படு தீவின் பொலம் பூண் வளவன்
என எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் புறநானூற்றில் (397:21-2) தீவு குறித்துக் குறிப்பிடுகிறார்.
பொலம்படு தீவிற்கு
எனப்பொன்மலிந்துள் தீவைப் பெருங்கதை (நரவாண காண்டம் 1.2.) கூறுகிறது.
பொன் நிறைந்த தீவு மேல் ஆர்வம் ஏற்படுவதுபோல் அதனை அடைவதில் அச்சம் ஏற்படுவதும் இயற்கைதானே!
Insula என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தீவு.
00
- துகள் வெருளி – Pnumonmicroscopicsilicovolcanocoviosophobia
மூச்சுடன் கரித் தூளைக் கலந்து இழுப்பது குறித்த மிகையான பேரச்சம் துகள் வெருளி.
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis என்பது நீளமான சொல்; நுரையீரல் நோயைக் குறிக்கிறது. தேசியப்புதிரர் கூட்டிணைவின் [National Puzzlers’ League (N.P.L.)] ஆண்டுக்கூட்டத்தில் அதன் தலைவர் எவெரட்டு சுமித்து (Everett M. Smith) என்பவரால் 45 எழுத்துகள் கொண்ட மிக நீளமான இச்சொல் புனைந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
23.02.1935 இல் நியூயார்க்கு எரால்டு திரிபியூன் (New York Herald Tribune) இதழில் வெளியான கட்டுரைத் தலைப்பு ஒன்றில் இடம் பெற்றது.
இதிலிருந்து உருவானதே Pnumono-microscopic-silico-volcano-coviosophobia என்னும் வெருளிநோய் குறித்த சொல்.
00
- துடிமானி வெருளி – Stethoscopephobia
இதயத் துடிப்புமானி(Stethoscope) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் துடிமானி வெருளி.
இதயத் துடிப்புமானி என்பது சுருக்கமாகத் துடி மானி எனப்பெறுகிறது.
00
- துடுப்புப் படகு வெருளி – Fʌmptophobia
துடுப்புப் படகு(rowboat) குறித்த அளவு கடந்த பேரச்சம் துடுப்புப் படகு வெருளி.
கைகளால் வலிக்கும் துடுப்பு என்பதால் இடையில் முடியாமல் போய் நேர்ச்சி(விபத்து) ஏற்படுமோ என்ற கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.
00
- துடைப்ப வெருளி – Sfoungaristraphobia / Skoupaphobia
துடைப்பம்(broom) குறித்த வரம்பற்ற பேரச்சம் துடைப்ப வெருளி.
Skoupa என்னும் கிரேக்கச் சொல்லிற்கு விளக்குமாறு எனப் பொருள்.
Sfoungaristra என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் துடைப்பம் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5






Leave a Reply