(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1621 -1630இன் தொடர்ச்சி)

1631. யப்பானியல்

Japanology

1632. யாப்பியல்

Stichology

1633. யானைத்தோலியல்

Pachydermatology

1634. வகைமுறை விசையியல்

Analytic mechanics

1635. வகையியல்

அமைப்பு வகையியல், பொதுப் பகுப்பாய்வியல், வகைப்பாட்டியல், வகையாக்கம், அமைப் பியல், வகைமையியல், வகையியல், திருமறைக் குறியீட்டியல் எனப்படுகின்றது. இவற்றுள்

குறியீட்டியல்  என்பது கிறித்துவ இயலில்  திருமறைக் குறியீட்டியல்- Typology(2) எனப்படுகிறது.

பிறவற்றுள் சுருக்கமான வகையியல் – Typology(1) இங்கே குறிக்கப்பெற்றுள்ளது.   

Taxo- என்னும் பிரெஞ்சுச் சொல்லிற்கு வகைப்பாடு எனப் பொருள்.

Typology1/Taxology

1636. வகைமை

Differential – வேற்றுமை, வேறுபாடு, வேறுபட்ட, வகையீடு, தரமுறு, வேறுபாடு திட்டம்(வேறுபாட்டுத்திட்டம்), வேற்றுமை, பிரித்தறிதல், வகைக்கெழு, வகையீட்டு, மாறுபாடு, எனப் பலவாறாகக் கூறப்படுகின்றது.

வேறுபாட்டுத்  திணையியல் –  Differential topology

வேறுபாட்டு உளவியல் – Differential Psychology

வகையீட்டுத் திணையியல்- Differential topology

என அகராதிகளில் ஒவ்வொரு வகையாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்குறித்தவற்றுள் வகையீடு என்பதைப் பயன்படுத்தலாம் என முதலில் எண்ணினேன். ஆனால், இச்சொல் கணக்குத்துறைக் கலைச்சொல்லாக அமைகிறது. மாறுபாடு, வேறுபாடு முதலானவை ஒப்பீட்டு முறையில் கூறுவதாக உள்ளது.

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்(திருக்குறள் 709) என்னும் பொழுது திருவள்ளுவர் கண்பார்வையின் வேறுபாடு களை வகைமையாகப் பகுக்கிறார். இச்சொல் பொதுவான சீரான சொல்லாக அமையும் எனக் கருதி இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வகைமை உளவியல்- Differential Psychology

வகைமைத்  திணையியல் –  Differential Topology

என ஒரு சீராக இங்கே குறிக்கப்பட்டுள்ளது.

Differential

1637. வகைமை உளவியல்

Differential psychology

1638. வகைமைத்  திணையியல்

Differential topology

1639. வடிவ ஒளியியல்

Geometric optics

1640. வடிவத் திணையியல்

Geometric topology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000