(தமிழ்ச்சொல்லாக்கம் 21- 40 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

41. (இ)ரட்சணம்               —           காத்தல்

42. சிரேசுட்டன் —           தலைவன் (பக்.11)

43. உபசாரபூர்வகம்          —           முன் மரியாதையாக (பக்.13)

44. சோடசம்       —           பதினாறு

45. வியாகுலம்  —           துக்கம்

46. சுவர்ணச்சலாகை       —           பொன் ஈட்டி

47. அளகபந்தி    —           மயிர் முடிச்சு

48. பாலாதித்தியன்          —           இளஞ்சூரியன்

49. தனசம்பத்து —           பணச்செல்வம் (பக்.22)

50. சூடகம்          —           வளையல் (பக்.23)

51. பிரலாபம்     —           புலம்பல் (பக்.25)

52. சம்பாவனை —           மரியாதை (பக்.29)

53. High Court – உயர்நீதிச் சாலை

இராமசாமி இராசு இளம்பிராயத்திலேயே மிகவும் நுட்ப உணர்வும் ஆழ்ந்த அறிவும் உடையராயிருந்தனர்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு’

என்ற ஆன்றோர் திருவாக்கைக் கடைப்பிடித்து பாரிசுட்டர் பரீட்சைக்குப் படிக்க விரும்பி 1882 ஆம் வருடம் இலண்டன் மாநகருக்குச் சென்றார். அங்குத் தங்கிய காலத்தில், ஆக்குசுபருட்டு யூனிவர்சிட்டியிலும், இலண்டன் யூனிவர்சிட்டி காலேசிலும், தமிழ், தெலுங்கு இவை இரண்டிற்கும் போதகாசிரியராக விருந்தது மன்றிப் பத்திரிகைகளுக்கு விசயதானஞ் செய்து அதனால் பெறும் பொருளால் தம்மையும் தம் குடும்பத்தையும் போற்றி வந்தார். அக்காலத்தில்தான், ஆங்கில பாசையில் ‘அறுபது மந்திரிகள் கதை‘ என்னும் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். தாம் குறித்துச் சென்ற பாரிசுட்டர் பரீட்சையில் தேறியபின் 1885 ஆம் வருடம் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டுச் சென்னை வந்து சேர்ந்தார்.

அதே வருடம் சூலை மாதத்தில் சென்னை உயர் நீதிச் சாலையில் (High Court) அவர் ஒரு பாரிசுட்டராக ஏற்றுக் கொள்ளப்பெற்றார்.

நூல்        :               பிரதாபசந்திர விலாசம் (1877) (1915) (பக்கம்-2)

நூலாசிரியர்         :               ப2. இராமசாமிராசு, பி.ஏ. பாரிசுட்டர் – அட் – லா எப்.ஆர்.எச்சு.எசு. (இலண்டன்) எம்.ஆர்.ஏ.எசு. (இலண்டன்)

பதிப்பாளர்          :               வி. இராமசாமி சாசுத்திரிலு

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்