ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 332 – 351 இன் தொடர்ச்சி)
352. எப்பராண்டோவியல்
நம்பிக்கை என்னும் பொருள் கொண்ட பிரெஞ்சு espérer, இலத்தீன் sperō சொற்களில் இருந்து உருவானது Esperanto என்னும் சொல். எப்பராண்டோ / எசுபெரண்டோ (Esperanto) என்னும் கட்டமைப்பு மொழி குறித்த தகவல்கள் 1887இல் உலுடோவிக்கு இலாசரசு (Ludovic Lazarus Zamenhof) எழுதிய ‘உனுவா இலிப்புரோ’ (Unua Libro)[4] என்னும் நூலில் முதலில் வெளிவந்தன. ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல்வேறு சொற்களைக் கொண்டு உலக மொழியாக உருவாக்கப்பட்டது இது. இதனை ஆங்கிலத்திற்கு மாற்றாகவோ ஆங்கிலத்துடன் கூடுதலாகவோ பலர் கற்றுப் பேசி வருகின்றனர். இம்மொழி குறித்த இயலே எப்பராண்டோ வியல். |
Esperantology |
353. எரிதல் பொறியியல் |
Combustion Engineering |
354. எரிமலை நீற்றியல்
எரிமலைச் சாம்பல் காலக்கணிப்பு. கட்ட குறியீட்டு காலவரிசை, எரிமலைச் சாம்பல் காலக்கணிப்பு, கட்ட குறியீட்டு காலவரிசை எனப்படுகிறது.
காலவரிசை கட்டமைப்பை உருவாக்க எரிமலைச்சாம்பல் பயன்படுவதால் மேற் குறித்தவாறு கூறுகின்றனர்.
téphra என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல். சாம்பல் என்பதைச் சுருக்கமாக நீறு எனலாம். இங்கே எரிமலைச் சாம்பலைக் குறிக்கிறது. எரிமலைச் சாம்பல்/நீறு மூலம் காலத்தைக் கணிப்பதை/ கால நிரலை அறிவதை ஆராயும் அறிவியல். எரிமலை நீற்றுக் கால நிரலியல் என்பதைச் சுருக்கமாக எரிமலை நீற்றியல் எனக் குறித்துள்ளோம். எனவே, எரிமலை நீற்றியல் Tephrochronology எனச் சுருக்கமாகக் கூறலாம். பலர் நீறு என்பதைப்புரிந்து கொள்ளாமல் நீர் என்றே பொருள் கொள்ளுகின்றனர். தமிழாசிரியர் ஒருவர் சிலேடைப்பாடல் என நீறு என்பதற்கு நீர் என்றே பயன்படுத்திப் பாடல் எழுதியுள்ளார். கல்யாணப்பரிசு என்னும் திரைப்படத்தில் “உன்னைக்கண்டு நான் வாட என்னைக்கண்டு நீவாட” என்னும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடலின் இடையில் “நெஞ்சமும் கனலாகி நீறாகும் போது” என்னும் ஒரு வரி வரும். நெஞ்சம் எரிந்து சாம்பாலான பின் வாழ்வில் நிம்மதி ஏது எனக் கேட்கிறார் கதை நாயகன். ஆனால் நீராகும்போது என்றே பலரும் குறித்துள்ளனர். திருநீறு என்பதைத் திருநீர் எனப் பிழையாக எழுதுவதுபோல் பல இடங்களில் ரகர றகர வேறுபாடு தெரியாமல் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். |
Tephrochronology |
355. எரிமலையியல் |
Volconology |
356. எலும்பியல் ostéon (> osteo) என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் எலும்பு. |
Osteology |
357. எலும்பு எண் கணிதம் |
Rabdology / Rhabdology |
358. எலும்பு நோய் இயல் |
Osteo pathology |
359. எலும்புக் கட்டுமான இயல் |
Orteology |
360. எழுத்துருவியல் |
Fontology |
361. எறும்பியல் |
Myrmecology / Formicology |
362. என்புருக்கி இயல் Phthisiology |
(தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன், அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 |
Leave a Reply