(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331   இன் தொடர்ச்சி)

332. ஊர்வனவியல்

 

ஈரிடவாழ்வி இயல், ஊரிகளியல், ஊர்வன அறிவியல், ஊர்வனவியல் என்கின்றனர். முதலை முதலான நீர்வாழ் உயிரிகள் நிலத்திலும் ஊர்வதால் ஊர்வனவியல் எனப் பொதுவாகக் கூறுகின்றனர்.

herpetón என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஊர்வன எனப் பொருள்.

பழங்கிரேக்கத்தில் amphí என்றால் இருவகை என்றும் bíos என்றால் வாழ்வு என்றும் பொருள். அஃதாவது இருவகை வாழ்வு.  நிலத்திலும் நீரிலும் வாழக்கூடியது என்பதால் இவ்வாறு கூறுகின்றனர். எனினும் ஊர்வன என்றாலும் கிரேக்கத்தில் இதைத்தான் குறிக்கின்றது.  ஈரிடவாழ்வி இயல் என்பதைப் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தினால் நிலத்தில் வாழும் ஊர்வனவற்றிற்குப் பொருந்தாது.

நாம் தமிழில் ஈரிட வாழ்வியியல்(Science of Amphibians), ஊர்வனவியல் (Science of Reptiles) என இருவகையாகக் கூறலாம்.

Herpetology

333. ஊனீரியல்        

 

ஊனீரியல், குருதி ஊனீரியல், குருதி நீரியல்,  தெளியவியல் எனக் கூறப்படுகின்றது. எல்லாமே பொருளடிப்படையில் சரிதான். எனினும் சுருக்கமாக ஊனீரியல் என்பதையே நாம் கையாள்வோம்.

Orrhology / Serology

334. எஃகிரும்புப் பொறியியல்

Steel Engineering

335. எகித்தியல்

Egyptology

336. எசுகிமோவியல்         

Eskimology / Inuitology

337. எடுத்துரை யியல்

 

Hermeneutics-விளக்கவியல் என்கின்றனர். ஆனால் Descriptive என்பதையும் விளக்கம் என்னும் பொருளில்தான் கையாளு கிறோம். பொருள்கோளியல் என்றும் குறிப்பிடுகின்றனர். Hermēneutikós என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மொழி பெயர்ப்பு, எடுத்துரை எனப் பொருள்கள். ஆனால், இது முழுமையான மொழிபெயர்ப்பு தொடர்பான அறிவியலன்று. எனவே, பிறமொழியில் தெரிவிப்பதை  எடுத்துரைப்பது தொடர்பான இயலை எடுத்துரை யியல் எனலாம்.

Hermeneutics

338. எட்டிரசுகானியல்

Etruscology

339. எண்கணியியல்

Numerology

340. எண்ணியல் நீர்ம இயங்கியல்

Numerical hydrodynamics

341. எதிர்காலவியல்

Futurology

342. எதிர்த்திறன் மரபியல்

Genetics of resistance

343. எதிர்ப்பு அரசியல்

Adversary politics

344. எதிர்மக் கருவளரியல்

 

eugenics- நல்லியல், மரபியல், இன மேம்பாடு என்றாலும் இந்த இடத்தில் எதிர்மத்துடன் சேரும்பொழுது கருக்கலைப்பு, கருத்தடை குடும்பக் கட்டுப்பாட்டின் பிற முறைகள் மூலம் வளர்கருவை அகற்றுவதைக் குறிக்கும். எனவே, கருத்தடையியல் என்று சொல்லலாமா? ஆனால், கருத்தடைமுறைகளைப்பற்றி ஆராயாமல், இன மரபிற்கு எதிரான போக்கைப்பற்றி ஆராய்வதால் எதிர்மக் கருவளரியல் என்பதே ஏற்றதாக இருக்கும்.

Negative eugenics

345. எதிர்மச் சமயவியல்

 

Theology – இறைமையியல் என்றும் சொல்லப்பட்டாலும் சமயவியல் என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. 

Negative Theology

346. எதிர் வினையியல்

Reactology

347. எந்திர அணுப் பொறியியல்

Mechatronics Engineering

348. எந்திர வேதியல்

Mechanochemistry / Mechanical Chemistry

349. எந்திரப் பொறியியல்

Mechanical Engineering

350. எந்திரனியல்   

Robotics

351. எபிரேயர் இயல்

 

எபிரேயர், இசுரயேலர் அல்லது இசுரவேலர் அல்லது (இ)யூதர்கள் என்றும் அழைக்கப்படுவர். எபிரேயம்  மொழி பேசுவதால் எபிரேயர் என்று அழைக்கப்படுகின்றனர்.

Judeology

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000