(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  556 – 570 இன் தொடர்ச்சி)

571. குமுகக் கிளைமொழியியல்

Social Dialectology

572. குமுக வளைசலியல்

Social Ecology/ Socioecology

573. குமுகவியல்

Sociology

574. கும்பல் உளவியல்

Crowd Psychology

575. குருதி இயல்

Haematology / Hematology

576. குருதி நோயியல்

Hemopathology

577. குருதியோட்டஇயல்

haima என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் குருதி. rhéō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாய்வு. குருதிப் பாய்வு = குருதி யோட்டம்.

Hemorheology/ Haemorheology

578. குருத்தெலும்பியல்

khóndros என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் ஒரு பொருள் குருத்தெலும்பு.

Chondrology

579. குமுக வளைசலியல்

Synoecology(1) சுற்றுச்சூழல் குமுகங்களின் கட்டமைப்பு, வளர்ச்சி, பகிர்வு ஆகியவற்றைக் கையாளும் சூழலியல் கிளை. எனவே, குமுக வளைசலியல் – Synoecology(1)  எனலாம்.

Synoecology(1)

580. குழந்தை உளவியல்

Child Psychology

581. குழந்தை மருத்துவம் 

Paed – என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குழந்தை.

pais > paid   >  paed  என உருவானது.

iatrós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மருத்துவர்.

பின்னிரண்டைச் சிறார் நோயியல் எனச் சிலர் குறித்தாலும் நோய்க்கான மருத்துவம் பற்றிய துறைதானே. எனவே, பொதுவில் குழந்தை மருத்துவம் என்றே அழைக் கலாம்.

Paediatrics/ Paidonosology/ Pedonosology

582. குழந்தையியல்

583. மண்ணியல் – Pedology(1)

குழந்தையியல் – Pedology(2)/Paedology

Pedology – மண் இயல், மண்ணியல், மண் தோற்றவியல், மண்வகை ஆய்வுநூல், குழந்தை வளர்ச்சி ஆய்வு எனப்படுகிறது.

Pédon என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மண். எனவே, மண்ணியல் எனப் படுகிறது.

Pedo  என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் குழந்தை. எனவே, குழந்தை யியல் என்றும் கூறப்படுகிறது.

எனவே, மண்ணியல் – Pedology(1) என்றும்

குழந்தையியல் – Pedology(2)/Paedology என்றும் கூறலாம்.

இதனைச் சிறார் நடத்தையியல் என்றும் தனியே குறித்திருந்தேன். குழந்தை யியலிலேயே குழந்தை நடத்தையியலும் அடக்கம் என்பதால் அதனை நீக்கி விட்டேன்.

Pedology(2)/ Paedology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000