ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 இன் தொடர்ச்சி)
835. திண்ம ஏரண நுட்பியல் |
Solid Logic Technology |
836. திபேத்தியல் |
Tibetology |
837. திமிங்கில இயல் cetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திமிங்கிலம். |
Cetology |
838. திராட்சை வளர்ப்பியல் திராட்சை தொடர்பானவற்றைக் குறிக்கும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான oeno சொல் eno என மாறியுள்ளது. |
Enology |
839. திராவிடவியல் |
Dravidology |
840. திருமறைக் குறியீட்டியல் மூலச்சொல்லான typus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு. இங்கே திரு மறைகளின் குறியீடுகளை ஆராய்வதைக் குறிக்கிறது. எனவே, திருமறைக் குறியீட்டியல் எனப்பட்டது. வேதம் என்றால் பொதுச் சொல்லாகக் கருதாமல் ஆரிய வேதமாக எண்ணுவர் என்பதாலும் மறை என்று மட்டும் குறிப்பிட்டால் பொருள் குழப்பம் வரும் என்பதாலும் திருமறை எனக் குறித்துள்ளேன். |
Typology2 |
841. திருமனையியல் naós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கோயில். திருச்சபைகளையும் தூய கட்டடங்களையும் ஆய்வு செய்யும் இயல். எனவே, பொதுவாகத் திருமனையியல் எனக் குறிக்கப்பட்டுள்ளது. |
Naology |
842. திரேசியல் திரேசு என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் கிரீசு, பல்கேரியா, துருக்கி இடையே பிரிக்கப்பட்டு அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புவியியல் பகுதி. இதனையும் இங்கு வாழும் திரேசு பழங்குடியினரையும் பற்றிய இயல் திரேசியல். |
Thracology |
843. திரைப்படவியல் |
Cinimatography / Cinematology / Filmology |
844. தீ வளைசலியல் |
Fire Ecology |
845. தீவிரப் பொருளியல் |
Radical Economics |
846. தீவினையியல் ponērós என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் துயரமானது. துயரம்தரும் தீவினைகளைப் பற்றிய இயல் என்பதால் தீவினையியல் எனப்பட்டது. |
Ponerology |
847. துகள் இயங்கியல் |
Particle Dynamics |
848. துகள் இயற்பியல் |
Particle Physics |
849. துகள் விசையியல் |
Particle Mechanics |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply