(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 855 – 867 இன் தொடர்ச்சி)

868. தேராய்வு உளவியல்

Experimental Psychology

869. தேராய்வுச் சூலியல்

Experimental Embryology

870. தேராய்வுவளைசலியல்

Experimental ecology

871. தேர்தலியல்

Psephology – தேர்தல் புள்ளியியல், தேர்தலியல், கருத்துக் கணிப்பியல், வாக்களிப்பியல் எனப்படுகிறது.

Psephos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கூழாங்கல். அப்போது கூழாங்கல்லைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தியதால் இச்சொல் உருவானது. (அதுபோல் சிறிய பந்து என்னும் பொருள் கொண்ட ballotte என்னும் பிரெஞ்சு சொல்லில் இருந்துதான் ballot உருவானது.)

வாக்களிப்பது குறித்த இயல் என்னும் பொருள் வருவதால் வாக்களிப்பியல் என்கின்றனர். வாக்களிப்பது தேர்ந்தெடுப் பதற்குத்தானே? தேர்தலில் தானே வாக்களிக்கிறோம். மேற்குறித்த சொற்கள் யாவும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, சுருக்கமான தேர்தலியல் – Psephology இங்கே குறிக்கப்பட்டுள்ளது.

Psephology

872. தேவதை இயல்

காண்க :- அணங்கியல் –  Fairyology

Angelology

873. தேவாலயவியல்

ecclesia என்னும் இலத்தீன் சொல்லிற்கும் ekklēsia என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் தேவாலயம் எனப் பொருள். எனவே, தேவாலயம் குறித்த இயல் தேவாலவியல் ஆனது.

Ecclesiology

874. தேனீ இயல் 

apis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தேனீ mélitta என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருளும் தேனீ. எனவே, தேனீ குறித்த இயல் தேனீயியல் ஆனது.

Apiology / Melittology / Apicology / Apidology

875. தேனீஇன வியல்

humenóptero என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு மெல்லிய தோல் என்றும் இறக்கை என்றும் பொருள்கள். தேனீ, குளவி முதலான இன வகைகளை இங்கே குறிக்கிறது. எனவே, தேனீ இனவியல் எனப்படுகிறது.

Hymenopterology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000