(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  850 – 854 இன் தொடர்ச்சி)
855. துருக்கியியல்Turkology
856. துருவார்ப்பியல்Uredinology / Urenology
857. துறைமுகப் பொறியியல்Harbor Engineering
858. தூசியியல் koniology  – துகளியல், தூசுயிர்த் தொடர்பியல்,  தூசி யியல். Konía என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூசி. எனவே, நாம் சுருக்கமான தூசியியல் – koniology என்பதையே பயன்படுத்தலாம்.Koniology / Coniology
859. தூய இலக்கிய இயல்  hiero- என்னும் பழங்கிரேக்கச் சொல் தூய நிலையையும் அதன் வழித் தூய பொருள்களையும் குறிக்கிறது. தூய பொருள்கள் குறித்த இலக்கியம் திருநிலை இலக்கிய இயல் என முதலில் குறிப்பிட்டிருந்தேன். சுருக்கமாகக் குறிப்பிட இப்பொழுது தூய இலக்கிய இயல்   எனலாம்.Heirology
860. தூய கணிதவியல்Pure mathematics
861. துப்புரவு நுட்பியல்Cleaner Technology
862. தூய பொருளியல்PureEconomics
863. மாசில் நிலக்கரி நுட்பியல்Clean Coal Technology
864. போர்வை யியல்   துரின்(Turin) அல்லது தூரின் இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் உள்ள வியமாந்தின் தலைநகரம் ஆகும். இந்நகரில் பாதுகாக்கப்படும் நார்மடி(இலினன்), வணக்கம் செலுத்தப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்கத் துணித் துண்டு ஆகும். இதனை உடற்போர்வை, சவப்போர்வை, புனிதப்போர்வை எனப் பலவகையாகக் கூறுகின்றனர். இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருவச்சாயல் சிலுவையில் அறையுண்டு இறந்து, துணியால் பொதிந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உருச்சாயலாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். அறிவியலார், இறையியலார், வரலாற்றாளர், ஆய்வாளர் போன்ற பலதுறை வல்லுநர்கள் நடுவே இதன் காலம், உண்மைத்தன்மை முதலியன குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை ஆராயும் துறையே தூரின் நகரப் போர்வையியல். இவ்வாறுதான் முதலில் பிறர்போல் குறித்திருந்தேன். எனினும் சுருக்கமாகப் போர்வையியல் என இப்போது குறித்துள்ளேன். Sindon என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் நார்மடி, போர்வை,  நார்மடிப் போர்வை.Sindonology
865. தூள்மாழை இயல்Powder Metallurgy
866. தெள்ளுப்பூச்சி யியல் பழங்கிரேக்கத்தில் síphōn என்றால் குழல் என்றும் ápteros இறக்கை யற்றவை என்றும் பொருள்கள். Siphonaptera என்பது தெள்ளுப்பூச்சியைக் குறிக்கிறது. Siphonapterology
867. தேநீரியல்   தேயிலையைக் குறிக்கும் சப்பான், சீன எழுத்தான சா என்பதன் மறு ஆக்கமே Tsio என்பது. தேயிலை நீர் >தேநீர்      Tsiology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000