ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 876 -894 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 868 – 875 இன் தொடர்ச்சி)

876. தையல் நுட்பியல் |
Stitch technology |
877. தொகுப்பு வானிலையியல் |
Synoptic Meteorology(1) |
878. தொடரியல் |
Phraseology |
879. தொடரி யியல் Latin இலத்தீன் சொற்களான ferrum, equus என்பனவற்றிற்கு முறையே இரும்பு, குதிரை என்று பெயர். இரும்புக்குதிரை என்பது தொடர்வண்டியைக், குறிப்பாக அதன் பொறியைக்குறிக்கிறது. தொடர்வண்டி என்பதன் இன்றைய வடிவமே தொடரி என்பது. |
Ferroequinology |
880. தொடர்கொலை யியல் இலண்டனில் வெண்கோயில் (Whitechapel) நகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொடர் கொலையாளி இயாக்கு என்பவன் குறித்த ஆய்வு. இதன் மூலம் தொடர் கொலைகளை ஆராய்வதால் தொடர் கொலையியல் எனப்படுகிறது. |
Ripperology |
881. தொல் புவியியல் |
Archeogeology |
882. தொல்லினவியல் |
Ethnoarcheology |
883. தொற்றியல் கொள்ளைநோய்கள் குறித்து ஆராயும் கொள்ளைநோயியல். இந்நோய்கள் தொற்றுமூலம் பரவுவன. ஆதலின் தொற்று நோயியல் எனப்படுகிறது. |
Phorology / Endemiology / Epidemiology |
884. தொகு மின்னணுவியல் |
Integrated Electronics |
885. தொடக்கநிலைக் கணிதம் |
Elementary Mathematics |
886. தொடர்ம இயற்பியல் |
Continuum physics |
887. தொடர்ம விசையியல் |
Continuum mechanics |
888. தொண்டை இயல் pharynx என்னும் இலத்தீன் சொல்லிற்கும் phárunx என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் தொண்டை எனப் பொருள். |
Pharyngology |
889. தொனி யியல் |
Tonology |
890. தொன்மப் புவியியல் |
Geomythology |
891. தோற்பதவியல் |
Nassology |
892. தொலைநிலநடுக்கவியல் |
Telesismology/ Teleseismology |
893. தொல் கால நிரலியல் |
Archeological Chronology |
894. தொல்விலங்கியல் Archeozoology, Archaeozoology என்றும் சொல்லப் படுகிறது. பழங்காலத்தில் மனிதர்களுக்கும் விலங்கு களுக்கும் இருந்த உறவு முறையைக் கூறுவது. விலங்கு எச்சவியல் என்று சொல்லத் தக்கது. எனினும் சொல் சீர்மை கருதித் தொல் விலங்கியல் – Archeozoology/Archaeozoology எனலாம். |
Archaeozoology / Archeozoology / Zooarchaeology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply