கருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்
241. உப்புமானி – salinometer/ salimeter/ salometer : கரைசலில் உள்ள உப்பின் செறிவை அளவிடும் மின்கடத்திப் பயன்படுத்தப்படும் கருவி. நீர்ம உப்பியல்புமானி, நீர்ம உப்பியல்பு அளவி என உப்புக் கரைசலை நீர்ம உப்பு என்பதும் சரியான சொல்லாட்சி அல்ல. உப்புமானி எனலாம்.
242. உமிழ் மின்னணு நுண்ணோக்கி – emission electron microscope
243. உமிழ்வு நிறமாலைமானி – emission spectrometer
244. உயர் நிகழ்வெண் மின்வலி மானி – high-frequency voltmeter
245. உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி – high-resolution electron microscope
246.உயர் மின்மறிப்பு மின்வலிமானி – high-impedance voltmeter
247. உயர்ச்சிமானி – orometer
248. உயர்தடை மின்வலி மானி – high-resistance voltmeter
249. உயர்மின்னழுத்த மின்னணு நுண்ணோக்கி – high-voltage electron microscope
250. தழல் நோக்கி – pyroscope : தீயிலிருந்து வெளியாகும் உயர்வெப்பக்கதிரின் செறிவை அளவிடும் கருவி. பொன்பூச்சு அல்லது வெள்ளிப்பூச்சு கொண்ட குமிழை உடைய மாறுபட்ட வெப்ப நோக்கி.
251. உயர்வெற்றிடஅளவி – high vacuum gauge
252. உயர அளவி – height guage
253. உயரமானி – altimeter : உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி (-செ). வானூர்தியில் அமைந்திருப்பது(-மூ.22), குத்துயரமானி
254.உயரமானி குறிப்பி altimeter-setting indicator உயரஅளவி அமைவு சுட்டி (-இ.), உயர அளவி அமைவு காட்டி (- ஐ.) என்பனவற்றைவிடச் சீர்மை கருதி உயரமானி அமைவு குறிப்பி > உயரமானி குறிப்பி எனலாம்.
255. உயரவரைவி – altigraph : உயரங்களைக் கணக்கிடுவதற்குரிய அழுத்தமானி. பதிவு செய்யும் பொறி யமைவினையுடைய உயர மானி என்று சொல்லலாம் (-ம.34) என்பர். ஆனால், அல்டிமீட்டரை (altimeter) உயரமானி என்பதால், உயர வரைவி என்பதே சீரான கலைச்சொல்லாக அமையும்.
256. உயரழுத்த அளவி – high pressure gauge : உயர் அழுத்த அளவி (-இ.), உயரமுக்கமானி (-ஐ.) என இரு வகையாகப் பயன்படுத்துகின்றனர். இக்கருவி மானிவகையில் சேராது; அளவியே ஆகும். உயரழுத்த அளவி என்பதையே ஏற்கலாம்.
257. உயிர்மிமானி – cytometer / hemacytometer / hemocytometer : உயிர்மிகளை (உயிரணுக்களை) எண்ணுவதற்கான கருவி. திசுப்பாய்மமானி (-ம) என்பதைவிட, இரத்த அணுக்களாகிய உயிர்மிகளை எண்ணி அளவிடும் கருவியை உயிர்மி எண்ணி என்னும் பொருளில் உயிர்மிமானி என்பதே சரியாகும்.
258. உயிர்வளிக் கோளக வெம்மிமானி – oxygen bomb calorimeter
259. உராய்வு-குழாய்ப் பாகுமைமானி – friction-tube viscometer
260. உராய்வுமானி – Tribometer : உராய்வுமானி- உராய்வினை அளப்பதற்கான பனிச்சறுக்குவண்டி போன்ற அமைவு(-செ.).
261. உருஅளவி – iconometer : நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி, தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி (-செ.) என விளக்கப்படுகிறது. உருவத்தை அளவிடுவதன் மூலம் பொருளின் அளவைக் கண்டறிய உதவும் கருவி என்பதால் உருமானி எனலாம்.
262. உருக்கிமானி – fluxometer : பெருக்களவி-எளிதில் உருகுவதற்காக மாழையுடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் கசிவை அளவிடும் கருவி. (-மு.288). பெருக்களவி என்பதைவிட உருக்கிமானி எனல் ஏற்றதாக இருக்கும்.
263. உருக்குலைவு நோக்கி – anamorphoscope : குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவத்தை நேர் திரிவடிவம் அல்லது உருக்குலைவாக்கம் என்பர். இதனைத்திருத்தும் பொருட்டு நோக்கும் கருவி. உருக்குலைவு திருத்தி(-இ.) என்பது செயல் அடிப்படையில் சரியாக இருந்தாலும் சொற்சீர்மை கருதி உருக்குலைவு நோக்கி எனலாம்.
264. ஆற்றல்மாற்றமானி – deformeter
265. உருகு மாற்றுமானி : manocryometer : பொருளின் அழுத்த மாற்றத்துடன் உருகுநிலை மாற்றத்தை அளவிடும் கருவி. மானி வகையை, அழுத்தம்சார் உருகுநிலை மாற்றுஅளவி (-இ.) என்பது சீராக அமையாது. சுருக்கமாக உருகு மாற்றுமானி எனலாம். [உருகுமானி என்றால் வேறுகருவியைக்(meldometer) குறிக்கும்.]
266. உருகுமானி – meldometer : பொருட்கள் உருகும் புள்ளிகள் அளவிடும் கருவி
267. உருச்சிதைவுமானி – distortion meter
268. உருத்தொடர் நோக்கி – tachistoscope : உருவம் அல்லது படிமத்தை விரைவாகக் குறித்த நேரத்தில் திரையில் காட்ட உதவும் கருவி. கவன ஈர்ப்புச் சோதனைமானி(-ஐ) என்று சொல்வதைவிட, அடுத்தடுத்த காட்சி உருக்களை உடனுக்குடன் தொடராக நோக்க உதவுவதால், உருத்தொடர் நோக்கி எனலாம்.
269. உருநோக்கி iconoscope : உருமின் பதிவி, குறும்படிமப் பதிப்பி, படக்குழாய், விம்பங்காட்டி, படிமங்காட்டி, உருக் காட்டி எனப் பலவகையாகக் குறிப்பிடப்படுகின்றது. உருத்தோற்றத்தை விரைவாகப் படக்கூறுகளாக்கி மின்னணுக்குறிகைகளாக(electronic signals) மாற்றும் தொலைக்காட்சிப்படப் பொறிக்குழல். உருத்தோற்றத்தை நோக்கிச் செயல்படுவதால் உருநோக்கி எனலாம்.
270. உருப்பிறழ்ச்சி மானி – astigmometer/ astigmatometer : உருப்பிறழ்ச்சி அல்லது புள்ளிக் குவியமின்மையை அளக்கும் கருவி. எனவே, புள்ளிக் குவியமானி(-இ.) என்பது எதிரான பொருளாக அமைந்து விடுகிறது. உருப்பிறழ்ச்சி அளவி (-இ.) என்று சொல்லப்படுவதைச் சீர்மை கருதி உருப்பிறழ்ச்சிமானி எனலாம்.
271. உருப்பெருக்கமானி – cratometer : உருப்பெருக்கத்திறனை அளவிடும் கருவி.
272. உருள்மைத் தடுப்புச் சுழல் நோக்கி – anti-rolling gyroscope
273. உருளை அழுத்த அளவி – cylinder pressure gauge
274. உருளைக்கொள் அளவி – cylinder contents gauge
275. உலர் குமிழ் வெப்பமானி – dry bulb thermometer
276. உலர் மின்கல வெப்பமானிdry cell thermometer
277. உலர்குமிழ் வெப்பமானி – dry-bulb thermometer
278. உலவைமானி – anemometer/windmeter :உலவிக் கொண்டு இருப்பதால் காற்றுக்கு உலவை என்றொரு பெயர் உள்ளது. காற்று உலவும் வேகத்தை அளவிடுவதைகக் குறிப்பதற்குச் சுருக்கமாக உலவை மானி எனலாம்.
279. உள் நுண்மானி – internal micrometer
280. உள்நோக்கி – endoscope : உடலின் உட்புறங் காண உதவும் கருவி. உட்காட்டி, உள்நோக்குக் கருவி, உள்ளுறுப்புக் காட்டி, குழாய்உறுப்பு உள்நோக்கி, உடல் உள்நோக்கி, அகநோக்கி என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றனர். பொருளடிப்படையில் எல்லாம் சரி. என்றாலும், கலைச்சொல் தரப்படுத்தப்படுவதே முறையாகும். உள்ளுறுப்பு நோக்கியைச் சுருக்கமாக உள்நோக்கி எனலாம்.
(பெருகும்)
Leave a Reply