கருவிகள் 1600 : 401-440 : இலக்குவனார் திருவள்ளுவன்
401. ஒளிநுண் வரைவி – photomicrograph : ஒளிநுண் வரைவு- நுண்பொருள்களை நுண்ணோக்கி மூலம் படம் எடுத்துப் பெருக்குதல்(- மூ.520). ஒளிநுண் வரைவு என்பதை விட ஒளிநுண் வரைவி என்பதே சரியாக இருக்கும்.
402. ஒளிப்பொருள் உறழ்மானி – twyman and greens interferometer – ஒளிசார் பொருள்களை ஆய்ந்தறிய பயன்படுததப்படுவதால், ஒளிப்பொருள் உறழ்மானி எனலாம்.
403. ஒளிபேசி – photophone : ஒளிபேசி – ஒருவர் பேசுவதைச்சிறிது தொலைவிற்கு ஒளிக்கற்றைவாயிலாகச் செலுத்தும் கருவி (-மூ 521)
404. ஒளிமானி – lucimeter /photometer : ஒளிமானி : ஒளி மூலகங்கள் இரண்டின் ஒளிவீசு திறனை ஒப்பிட்டுப்பார்க்கப்பயன்படும் கருவி (-மூ.529). சூரியக் கதிர்வீச்சுஅளவி (-இ.) ஒளிச்செறிவை அளக்கும் கருவி. எனவே, ஒளிச்செறிவுமானி என்பதன் சுருக்கமாக ஒளிமானி என்றே சொல்லலாம்.
405. ஒளிமின் அச்சுக்கோணமானி – photogoniometer
406. ஒளிமின் அடர்த்திமானி – photoelectric densitometer
407. ஒளிமின் உடனொளிர் மானி – photoelectric fluorometer
408. ஒளிமின் எதிரொளிப்பு மானி – photoelectric reflectometer
409. ஒளிமின் கலங்கல் மானி – photoelectric turbidimeter
410. ஒளிமின் பெருக்கி – photo-transistor : ஒளிமின் பெருக்கி – ஒருவகை மின்பெருக்கி. இதில் ஒளிபடும்பொழுது அதன் மின்னோட்டத்தடை வெகுவாகக் குறைக்கப்படுகிறது.(-ம.479)
411. ஒளிமின் வண்ணமானி – photoelectric colorimeter
412. ஒளிமின்கடத்து மானி – photoconductive meter
413. ஒளிமின்குழாய் மின் கடவுமானி – phototube current meter
414. ஒளிமின்தழல்மானி – photoelectric pyrometer
415. ஒளிமின்னணு உமிழ்குழல் ஒளிமானி – photoemissive tube photometer
416. ஒளிமின்னழுத்த மானி – photovoltaic meter
417. ஒளிமின்னிய ஒளிமானி – photoelectric photometer
418. ஒளியிய உறழ்மானி – Fizeau interferometer : ஒளியிய மேற்பரப்பு வடிவத்தை 419. அளக்கப் பயன்படும் கருவி. இப்போலைட்டு ஃ பிசௌ (Hippolyte Fizeau) என்னும் பிரெஞ்சு அறிவியலாளர் பெயரில் ஃ பிசௌ உறழ்மானி என அழைக்கப்பெறுகிறது. ஒளியிய உறழ்மானி எனலாம்.
419. ஒளியிய எக்குறு காந்தமானி – optical pumped magnetometer
420. ஒளியிய எதிரொளிப்புமானி – optical reflectometer
421. ஒளியிய நிறமாலை நோக்கி – optical spectroscope / light microscope
422. ஒளியிய நிறமாலைமானி – optical spectrometer
423. ஒளியிய நுண்ணோக்கி – optical microscope / light microscope
424. ஒளியியச் சரிவளவி – optical clino meter
425. ஒளியியத் தழல்மானி – optical pyrometer
426. ஒளியூட்டமானி – Illuminometer
427. ஒளியூட்டு ஒளிமானி – illumination photometer
428. ஒளியூட்டு வரைவி – actinography
429. ஒளியூடி நுண்ணோக்கி – dyson microscope : ஒளிக்கதிர் இரண்டு இணைக்கற்றைகளாகப் பிரிக்கப்பட்டு மீண்டும் இணைத்தகடுகளின் மேற்பரப்பு எதிரொளிப்பு மூலம் மீளவும் இணைந்து ஒரு கற்றை ஆய்வில் உள்ள பொருளின் ஊடாகக்கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட நுண்ணோக்கி. ஒளியூடி நுண்ணோக்கி.
430. ஒளிர் நுண்ணோக்கி / ஒளிர் ஒப்புநோக்கி – blink microscope/ blink comparator : இரவு வானில் எடுக்கப்படும் இரு படங்களை ஒப்பிட்டு இமைப்பு நேரத்தில் ஏற்பட்டுள்ள ஒளிர்வு மாற்றத்தை ஒப்பிட்டு நோக்க உதவும் கருவி.
431. ஒளிர்வலகுமானி – luxmeter : ஒளிர்மை அலகை அளவிடும் கருவி. ஒளிர்வலகுமானி எனலாம்.
432. ஒளிர்வலைமானி – spectrofluorimeter : ஒளிர்வுஅலைமாலையைப் பதிவு செய்யும் கருவி.
433. ஒளிர்விப்பு நோக்கி – snooper scope : இருளில் உள்ள பொருள்களை நோக்குவதற்காக அகச்சிவப்பு கதிர்களால் ஒளிரச் செய்து எதிரொளிக்கும் கதிர்களை க் காட்சி உருவாக மாற்றுவது. ‘அகச்சிவப்பு இருள்விளக்கு’ என இப்பொழுது குறிப்பிடுகின்றனர். ஒளிர்விப்பதன் மூலம்நோக்க உதவுவதால் ஒளிர்விப்பு நோக்கி எனலாம்.
434. ஒளிர்வு நுண்ணோக்கி – fluorescent microscope / fluorescence microscope : ஒளிர்தல் அல்லது மினுக்குதலைப் பயன்படுத்தும் ஒளியிய நுண்ணோக்கியே ஒளிர்வு நுண்ணோக்கியாகும். ஒளிர்பொருள் நுண்ணோக்கி, ஒளிர்வு நுண்ணோக்கி, உடனொளிர் நுண்ணோக்கி என மூவகையாகப் பயன்படுத்துகின்றனர். சுருக்கமாக உள்ள ஒளிர்வு நுண்ணோக்கி என்பதையே தரப்படுத்தலாம்.
435. ஒளிர்வுநோக்கி – fluoroscope : ஒளிபுகாப் பொருளின் உட்கட்டமைப்பை ஆராய்வதற்காகக் கதிர் வீச்சைப் பயன்படுத்தி நோக்கும் கருவி. உடனொளிர் படங்காட்டி, உடனொளிர்வு காட்டி எனக் கூறப்படுகின்றது. ஒளிர்வுநோக்கி என்பதே சரியனதாய் அமையும்.
436. ஒளிர்வுமானி – fluorimeter / fluorometer : ஒளிர்வை அளவிடுவதற்குரிய கருவி.
437. ஒளிவட்ட மின்வலி மானி – corona voltmeter
438. ஒளிவட்ட வரைவி – coronagraph : பரிதி வட்டத்தைப் பதிய உதவுவது.
439. ஒளிவிலக்கத் தொலைநோக்கி – refracting telescope
440. ஒளிவிலகல்மானி – refractometer ஒளிவிலகல் அளவி,ஒளிவிலக்க அளவி, ஒளி விலகல் மானி, முறிவுமானி, ஒளிச்சரிவுமானி, உப்புமானி, உப்பளவுமானி எனப் பலவகையாகக் கையாள்கின்றனர். ஒளிவிலகல்மானி என்றே நாம் குறிக்கலாம்.
Leave a Reply