கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்
921. | தொலைவுமானி
|
tachymeter / tacheometer/ trochometer
|
நில அளவையில் பயன்படும் தொலைவை விரைவாக வரையறுக்கும் அளவி. உடல் அசைவு வேகமானி, பொருள் அசைவு வேகமானி, நில அளவாய்வாரின் விரை இடக் குறிப்பெடுப்புக் கருவி, ஊர்திச் செலவுத் தொலைமானி(-செ.), ஊர்தித்தொலைவுமானி(-இ.) எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். தொலைவுமானி என்றால் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். |
922. | தொலைவெப்பநிலைநோக்கி | telethermoscope | |
923. | தொலைவெப்பமானி | telethermometer | |
924. | நகர்-சுருள் மின்கடவுமானி | moving-coil galvanometer | |
925. | நகர்த்து நுண்ணோக்கி , | traveling microscope | நீளத்தைத் துல்லியமாக வரையறுப்பதற்காகக் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் நகர்த்தும்வகையில் தண்டவாளம் உடைய குறைந்த ஆற்றல் நுண்ணோக்கி. |
926. | நகர்தள எடைமானி | poidometer | |
927. | நகர்வு மானி | drift meter | |
928. | நடுக்க வரைவி | seismograph | நிலநடுக்க அதிர்வுகளைப்பதிவு செய்யும் கருவி.
நிலஅதிர்ச்சி காட்டி, நிலநடுக்கக் கருவி, நில அதிர்ச்சி குறி கருவி, நிலநடுக்கப்பதிவு கருவி, புவியதிர்ச்சிபதிகருவி, பூமிநடுக்கம் பதிகருவி, எனக் குறிக்கப்பெறுவன பொதுவான பெயர்களாக அமைகின்றன.
நில அதிர்ச்சி வரைபடம என்பது இக்கருவி மூலம் உருவாக்கும் படத்தைக் குறிக்கின்றது. நிலநடுக்கப் பதிவி, நிலநடுக்க வரைவி, பூகம்பவரைவி, என்பன அடிப்படையில் சுருக்கமாக நடுக்க வரைவி வரைவி எனலாம். அதிர்வு வரைவி என மற்றோர் கருவி(vibrograph) உள்ளதால், வேறுபடுத்தும் நோக்கில் நடுக்க வரைவி என்பதே பொருத்தமாக அமையும். |
929. | நடுவரை தொலைநோக்கி | equatorial telescope | |
930. | நடை எண்மானி | passometer | பெடோ மீட்டர் / pedometer, பாசோமீட்டர்/passometer ஆகிய இரண்டையும் நடைத்தொலைவளவி (-இ.) எனக் குறிப்பது பொருந்தாது.முன்னது நடந்து செல்லும் தொலைவைக் குறிப்பது. பின்னது கடந்து செல்லும் எண்ணிக்கையைக் குறிப்பது. எனவே, முறையே நடைத்தொலைவுமானி, நடைஎண்மானி எனலே பொருந்தும். |
931. | நடைத்தொலைவுமானி | pedometer | |
932. | நலிகுறிகைக் கதிரியமானி | Dicke radiometer | இரைச்சலில் நலிந்த குறிகைகளைக் (signals)
கண்டறிய உதவுவது. இராபர்ட்டு தீக்கே (Robert Dicke) என்னும் அறிவியலாளர் கண்டறிந்த விசைப்பி முறையைப்பயன்படுத்தி இயங்குவதால் தீக்கே கதிரியமானி எனப்படுகின்றது- |
933. | நவச்சாரமானி | ammonia meter | |
934. | நழுவுகம்பித் திறன்மானி | slide-wire potentiometer | |
935. | நறவு வெப்பமானி | alcohol thermometer | |
936. | நறவுமானி | Vinometer | தேறல் வெறியமானி ( -செ.)
பழமதுவில் (wine) கலந்துள்ள நறவின் (alcohol) அளவீட்டை அளக்கும் கருவி. எனவே, நறவுமானி எனலாம். |
937. | மீள்மமானி | pachimeter | மீள்திறனுடைய திண்மத்தின் மீள்பரப்பை அளவிடும் கருவி.
நறுக்க எல்லைஅளவி (-இ.) எனக் கூறுவதைவிட, மீள்திறமானி > மீள்மமானி என்றால் பொருள் தெளிவாக இருக்கும். |
938. | நறுக்கு உறழ்மானி | shearing interferometer | |
939. | நனைவு வளிமமானி | wet-test meter | |
940. | நாடி வளியழுத்தமானி | Sphygmomanometer | |
941. | நாற்பகுதிமின்மானி | lindemann electrometer | ஃபிரெடிரிக்கு இலிண்டெமண் (Frederick Lindemann) என்னும் அறிஞரால் மேம்படுத்தப்பட்ட மின்மானி.
இரு தட்டுத்தொகுப்புகளுடைய நாற்பகுதிமின்மானி. |
942. | நான்முழமானி | fathometer | கடலின் ஆழத்தை அளக்கும் அலகு ஆறடி அளவுடைய பேதம்(fathom) எனப்படுகிறது. ஆறடிக்குச் சமமான நான்குமுழ அளவு என்னும் பொருளில் நான்முழம் எனலாம். கடலின் ஆழம் எத்தனை நான்முழம் கொண்டது எனக் கணக்கிட உதவுவதால் நான்முழமானி எனலாம். |
943. | நான்முனை அலைப் பகுப்பாய்வி | quadrupole spectrometer | |
944. | நிகர எல்லொளிமானி | net pyranometer | |
945. | கால வரைவி | chronograph | நிகழ்ச்சிப் பொழுதுகளைப் பதிவதற்கு உதவும் கருவி. |
946. | நிகழ்வெண் கதிர் நோக்கி | ondoscope | உயர் நிகழ்வெண்கதிர்வீச்சு கண்டறிய நோக்கப்படும் ஒளிர்விறக்கக் குழல். |
947. | நிகழ்வெண் வகை தொலைமானி | frequency-type telemeter | |
948. | நிகழ்வெண்-கள எதிரொளிப்பு மானி | frequency-domain reflectometer | |
949. | நிகழ்வெண்மானி | counter/frequency meter
or frequency counter |
நிகழ்விடை நேரவளவி(-இ.) என்றால் நிகழ்வுகளின் இடையே ஆகும் நேரத்தை அளப்பது எனத் தவறான பொருள் வரும். நிகழ்வு எண்மானி>நிகழ்வெண்மானி எனலே சரியாகும். |
950. | நிரப்பு அமைவு வெப்பமானி | filled-system thermometer | |
951. | நிரவல்மானி | head meter | பாய்மானியில் ஒரு வகை. எனவே, அழுத்த முகப்புசார் ஓட்டஅளவி (-இ.) என்பது பொருந்தாது. அழுத்த நிரவலில் (pressure head ) ஏற்படும் மாற்றங்களைப் பொருத்து இதன் செயல்பாடு அமைவதால், நிரவல்மானி எனலாம். |
952. | நில வெப்பமானி | pyrgeometer | நில வெப்பவீச்சுமானி > நில வெப்பமானி |
953. | நிலத்தடி வெப்பமானி | geothermometer | பூமிக்கு அடியில் உள்ள பகுதியின் வெப்ப நிலையைக் காட்ட உதவும் கருவி. இதனைச் சிலர் புவிவெப்பமானி அல்லது புவிமானி என்பது பொருந்தாது. புவி மானி என்றால் புவியின் வெப்பநிலையை அளவிடும் கருவி என்று பொருளாகும். சுரங்கம் முதலான நிலத்தடிப்படிகுதியின் வெப்ப நிலையைக் கண்டறிய உதவுவதால் நிலத்தடி வெப்பமானி என்பதே ஏற்றதாக இருக்கும். |
954. | நிலநடுக்க நோக்கி | Seismoscope | |
955. | நிலநடுக்கமானி | Seismometer | |
956. | நிலை அமிழ்வு நீரடர்மானி | constant immersion hydrometer | |
957. | நிலை அழுத்த ஈடுசெய் வளி வெப்பமானி | Callendar’s compensated air thermometer | காலெந்தர் ( Hugh Longbourne Callendar: 1863-1930))என்னும் இங்கிலாந்து அறிவியலாளர் பெயரில் அழைக்கப்படும் நிலை அழுத்த வளிவெப்பமானியாகும். எனவே, நிலை அழுத்த ஈடுசெய் வளி வெப்பமானி எனலாம். |
958. | நிலை அழுத்த வளிம வெப்பமானி | constant-pressure gas thermometer | |
959. | நிலைப்புக் கோணமானி | stationary goniometer | |
960. | நிலைகுவிவுத் தொலைநோக்கி | coude telescope | நிலையாகப் பொருத்தப்பட்ட குவி மையம் உடைய எதிரொளிர்ப்புத் தொலைநோக்கி.
|
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply