Haptophobia_தீண்டுகை வெருளி

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள்

தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம்

தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia

அல்லது

தொடுகை வெருளிAphephobia/ Aphenphosmphobia

அல்லது

தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும்.

[தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி]

– இலக்குவனார் திருவள்ளுவன்