Bathmophobia படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia

  படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன.

படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2)

இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி மனமுவந்து ஏற்பாடு செய்யும் உணவுத்திட்டம் முதலியன என்கிறார். இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தரப்படும் படி(allowance) என்பதற்கு இது முற்றிலும் பொருந்துகின்றது. எனினும் மாடி அல்லது ஏணி ஏறுவதற்குரிய படியைக் குறிக்கும் சொல் அரிதே காணப்படுகின்றது.

குறுந் தொடை நெடும் படிக்கால் (பட்டினப்பாலை : 142)

என்று சொல்லும பொழுது ஏணிப்படியைக் குறிப்பிடுகின்றது.

ஏறவும் இறங்கவும் உதவும் படி பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம்

படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia

இலக்குவனார் திருவள்ளுவன்