கலைச்சொல் தெளிவோம் 26 : உழலி – wanderer
26 : உழலி – wanderer
கோள்கள், விண்மீன்கள், உலவிகள் தவிர விண்ணில் திரிவனவற்றைத் திரிவன, வாண்டரர்/wanderer என்றே சொல்கின்றனர். மனையியலில் இதற்கு அலைபவர் எனப் பொருள் தந்துள்ளது, அலைந்து திரியும் மக்களைத்தான் குறிக்கும்; விண்பொருளைக் குறிக்காது. ஆதிமந்திபோல் ‘உழல்வென்கொல்லோ’ எனப் புலவர் வெள்ளிவீதியார் கேட்கிறார்(அகநானூறு 45.15). உழல் அடிப்படையில் பல சங்கச்சொற்கள் உள்ளன. வானில் உழல்வனவற்றை நாம் உழலி எனச் சொல்வதே பொருத்தமாக அமையும்.
உழலி – wanderer
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply