anatomy01

kalaicho,_thelivoam01

 

அக– internal

அண்மை–proximal

கீழ்–inferior

உழை-lateral

எதிர்மம்-opponens

குறு-brevis

சேய்மை–distal

நடுவண்மை medial

சிறுமினிமி/minimi

நெடு-longus

நீள்-Extensor

பின்-posterior

புறம்-dorsal

முன்-anterior

வெளி-external

மடக்கு-abductor

விரி–adductor

ஆழ்–deep

மீ–superficial

மேல்–superior

 

  உடலுறுப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதன்மை உறுப்பின் அருகில் அல்லது தொலைவில் அல்லது முன்புறம் அல்லது பின்புறம் அல்லது பக்கவாட்டில் என்பனபோல் அமைவிடத்தைக் குறிப்பிட்டே உடலுறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவர். இத்தகைய சுட்டடைகள் சங்கச் சொற்களாக அமையும் பொழுது எளிதான சொல்லாக்கங்கள் உருவாகின்றன. அண்மை(1), அண்மைய(1), சேய்மையன்(1), சேய்(43), சேய்த்து(8), சேய(4), சேயது(1), சேயர்(5), மேல்(89),கீழ்(33), அகம்(111), அக(36), தாழ்(88), பின்(79), புற(150), புறம்(108), ஆழ்(14), முன்(70), முன்பு(49), உழை(34), மருங்கு(200), மடக்கி(1), விரி (103) முதலான அமைவிடங்களைக் குறிக்கும் சங்கச் சொற்களைக் கொண்டு நாம்   உடலுறுப்புகளைக் குறிப்பிடுவது ஏற்றதாக இருக்கும்.

 

அக

உள்முகம் அல்லது உட்புறம் என்னும் பொருளிலான இண்டெர்னசு/ internus என்னும் இலத்தீன் சொல்லடிப்படையில் உருவானதே இண்டெர்நல்/ internal. அகம் என்பதையும் உட்புறம் என்பதன் பொருளில் கையாளுகிறோம். எனவே, அக–internal எனலாம்.

அக– internal

 

அண்மை

 

ஓர் உறுப்பின் மிக அருகில் உள்ள மற்றோர் உறுப்பை ‘மிக அருகில் உள்ள’ என்னும் பொருள் தரும் இலத்தீன் சொல்லான பிராக்சிம்(proxime = nearest) என்னும் சொல்லின் அடிப்படையில் பிராக்சிமல் (proximal) என்று குறிக்கின்றனர். ‘அண்மை’ என நாம் குறிப்பது பொருத்தமான கலைச் சொல்லாக அமையும்.

அண்மை–proximal

கீழ்

கீழானது என்று தரநிலையில் குறிக்காமல் ஒன்றின் கீழ்ப்பகுதியில் உள்ளது என்னும் பொருளில் இன்பீரியர்/inferior/ உடலுறுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. கீழ்–inferior எனலாம்.

 

கீழ்–inferior

 

குறு, எதிர்மம், உழை

மிக மிகச் சிறிய உறுப்பைக் குறு-பிரெவிசு/brevis என்று சொல்லலாம்.

எதிர்ப்புற இயக்கத்தில் அமைவதை எதிர்மம்-ஆப்பனென்சு/opponens என்று சொல்லலாம்.

அடுத்து அமையக் கூடியதை உழை-லேட்டரெல் /lateralஎன்று சொல்லலாம்.

உழை-lateral

எதிர்மம்-opponens

குறு-brevis

 

சேய்மை

 

முதன்மை உறுப்பின் தொலைவில்(டி/di) நிற்கும்(ஃசடேன்சு/stans) என்னும் பொருளமைந்த இலத்தீன் சொற்கள் அடிப்படையில் டிசுடல்/ distalஎனக் குறிக்கின்றனர். இப்பொருண்மைக்கு அண்மைக்கு எதிரான சேய்மையைக் குறிப்பது பொருத்தமாக அமையும்.

சேய்மை–distal

நடுவண்

மீடியல்/medial நடுப்புறம்நோக்கிய அல்லது நடுப்புறத்திற்குஅருகிலுள்ள என்னும் பொருளில் கையாளப்படுகிறது. நடுநாள்(43), நடுவண்(14), நடுவணது(2), நடுவணன்(1), நடுவு(5), நடுவுநிலை(1) என நடுப்பகுதி தொடர்பாகவும் அண்மை(1) குறித்தும் சங்க இலக்கியச் சொற்கள் உள்ளன. நடுவணது அண்மையாக அமைவதை நாம் நடுவண்மை எனலாம்.

நடுவண்மை – medial

நெடு, சிறு

மிக நீண்ட உறுப்பைக் குறிக்க நெடு-இலாங்கசு/longus என்று சொல்லலாம்.

மிகச்சிறியதைக் சிறு-மினிமி/minimi என்று குறிப்பிடலாம்.

சிறிய விரலைக் குறிப்பதால் சிறு விரல் என்று குறிக்கின்றனர். சுண்டு விரல் என்னும் சொல் நடைமுறையில் இருக்கும் பொழுது அவ்வாறே சொல்வதே சிறந்ததாகும்.

சிறு /சுண்டு விரல்-minimi

நெடு-longus

 

புற, புறம், முன்பக்கம்

 

முதன்மை உறுப்பின் வெளிப்புறம் அமைவதை எக்சுடெர்னசு/externus என்னும் இலத்தீன் சொல்லடிப்படையிலான எக்சுடெர்னல்/external என்று குறிப்பிடுகின்றனர். உறுப்பின் புறத்தே அமைவதை புறம் என்று குறிப்பிடலாமா எனில் சிக்கல் வரும். ஏனெனில், பின்புறம் அமையும் உறுப்பைக் குறிக்க போசுடெரியர்/posterior என்னும் சொல்லும் டோர்சல்/dorsal என்னும் சொல்லும் பயன்படுத்தப்படுகின்றன. எக்சுடெண்சர்/Extensor/ என்னும் மற்றொரு சொல்லும் உள்ளது. எனவே, வேறுபடுத்திக் கூற வேண்டும்.

முதன்மை உறுப்பின் வெளியே அமைவதை வெளி-external என்றே குறிக்கலாம்.

 

முன்(புறம்)–ஆண்டிரியர்/anterior என்றும் பின்(புறம்)–போசுடெரியர்/posterior என்றும் சொல்வது ஏற்றதாக இருக்கும். புறத்தே அமையும் உறுப்பைப் புறம்-டோர்சல்/dorsal என்று குறிக்கலாம். முதன்மை உறுப்பின் நீட்சிபோல் அமைவதை நீள்-எக்சுடெண்சர்/Extensor/ என்றே குறிக்கலாம்.

 

நீள்-Extensor

பின்-posterior

புறம்-dorsal

முன்-anterior

வெளி-external

 

மடக்கு, விரி

உள்நோக்கி இழுக்கப்படும் உறுப்புகளை உள்ளிழுத்தல் என்றும் அகம் இழுத்தல் என்றும் குறிப்பிடுகின்றனர். அதே போல் இவற்றுக்கு எதிரானவற்றை வெளியே தள்ளுதல் என்று குறிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் இயல்பாக மடக்கு-அப்டக்டர்/ abductor , விரி –அட்டக்டர்/ adductor என்று சொல்வதே சிறப்பாக இருக்கும்.

 

மடக்கு-abductor

விரி–adductor

 

மீ, ஆழ்

 

இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர் (குறிஞ்சிப்பாட்டு : 27)

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் (பதிற்றுப்பத்து : 77.5)

காழ்விரி கவையார மீவரும் (கலித்தொகை : 4.9)

என்பன போல் மீ தனிச் சொல்லாகவும் (13) கூட்டுச்சொல்லாகவும் சங்க இலக்கியங்களில் மிக மேலே என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

மிக மேலே உள்ள உறுப்பைக் குறிக்க மீ-சூப்பர்பிசியல்/ superficial

என்று அடையாளங் காட்டலாம்.

தோற்பரப்பிற்கு மிக மேலே உள்ள-அஃதாவது மிக அண்மையில் உள்ள-உறுப்பையே மீ என்னும் சொல்லால் குறிப்பர். எனவே, தோற்பரப்பிற்குத் தொலைவில் உள்ளதை ஆழ்-டீப்/deep எனக் குறிப்பர்.

ஆழ்–deep

மீ–superficial

 

மேல்

சூப்பரசு/superus என்னும் இலததீன் சொல்லில் இருந்து உருவானதே சுப்பீரியர்/superior. இதன் பொருள் மேலானது என்றில்லாமல் மேற்பகுதியில் உள்ளது என்னும் பொருளில் உடலுறுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, மேல்–superior எனலாம்.

மேல்–superior

 

இவற்றின் அடிப்படையில் எல்லா உடலுறுப்புகளையும் குறிக்க இயலும். எனினும் எடுத்துக் காட்டிற்காகச் சிலவற்றைப் பார்ப்போம்.

 

அக இடுப்புச்சிரை internal illiac vein

அகஇடுப்பு நாடி-internal iliac artery

அகக் கழுத்துச் சிரை-internal jugular vein

ஆழ் உள்ளங்கை வளைவு-deep pulmar arch

உழைக் கிளை–lateral branch

கட்டைவிரல் சேய்மை எலும்பு-distal phalanx of hallux

கீழ் வயிறு-inferior belly

கீழ்ப் பெருஞ்சிரை-inferior vena cava

சுண்டுவிரல் எதிர்மம்-opponens digital minimi

சேய்மை எலும்பு-distal phalanx

சேய்மைவிரலிடைஇணைப்பு-distal interphalangeal joint

பின் கீழ்க்கால் நரம்பு-posterior tibial nerve

பின் முழங்கால் நாடி-posterior tibial artery

பெருவிரல் அண்மை எலும்பு-proximal phalanx of thumb

பெருவிரல் சேய்மை எலும்பு-distal phalanx of thumb

பெருவிரல் சேய்மை எலும்பு-distal phalanx of thumb

மீ உள்ளங்கை வளைவு-superficial palmar arch

முன் கழுத்துச்சிரை-anterior jugular vein

முன் மேலுதட்டுத் தசைகள்-anterior labial muscles

மேல் துண்டம்-superior lobe

மேல் நுரையீரல் சிரை-superior pulmonary vein

விரல் புற நரம்புகள்-dorstal digital nerves

விரலிடை அண்மை எலும்பு மூட்டுகள்-proximal inter phalangeal joint

விரி சிறு தசை-adductor minimus muscle

விரி குறுந்தசை-adductor brevis muscle

விரி நெடுந்தசை-adductor longus muscle

விரி பெருந்தசை-adductor magnus muscle

விரிதசை-adductor muscle

வெளி இடுப்பு நாடி-external iliac artery (நாடி என்பதையே இப்பொழுது தமனி என்றும் குறிக்கின்றனர்.)

வெளி இடுப்புச் சிரை-external illiac vein