அக– internal அண்மை–proximal கீழ்–inferior உழை-lateral எதிர்மம்-opponens குறு-brevis சேய்மை–distal நடுவண்மை – medial சிறு–மினிமி/minimi நெடு-longus நீள்-Extensor பின்-posterior புறம்-dorsal முன்-anterior வெளி-external மடக்கு-abductor விரி–adductor ஆழ்–deep மீ–superficial மேல்–superior     உடலுறுப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதன்மை உறுப்பின் அருகில் அல்லது தொலைவில் அல்லது முன்புறம் அல்லது பின்புறம் அல்லது பக்கவாட்டில் என்பனபோல் அமைவிடத்தைக் குறிப்பிட்டே உடலுறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவர். இத்தகைய சுட்டடைகள் சங்கச் சொற்களாக அமையும் பொழுது எளிதான சொல்லாக்கங்கள் உருவாகின்றன. அண்மை(1), அண்மைய(1), சேய்மையன்(1), சேய்(43), சேய்த்து(8),…