சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 
(தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 556-560
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
உருதுமொழிச் சொற்கள்
556. கம்மி – குறைவு
557. சிபாரிசு – தகவுரை
558. டோபிகானா – வண்ணான் சாவடி
559. சராய் – காற்சட்டை
★
560. visting Card – காணும் சீட்டு
சிரீமதி, காமா என்ற அம்மையாரின் நட்பு சிறிது காலத்திற்குள் சிரீமான் ஐயருக்குக் கிடைத்தது. நாளுக்கு நாள் அவர்களது நட்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. பிறகு ஐயர் சிலகாலம் பாரீசு நகரிலிருந்து பின்னர் உரோமாபுரி, செருமனி, முதலிய இடங்களுக்குச் சென்று துருக்கி தேசத்தின் தலைநகரான கான்சுதாந்தி நோபிள் வந்தார். அங்கிருந்து அவர் ஒரு பக்கிரி வேடந்தாங்கி இந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏறி சபமாலையுடன் ’அல்லாகோ அக்பர்’ என்று அடிக்கடி கூறிக்கொண்டு முகம்மதியர்களைப் போல் கப்பலில் ஒவ்வொரு நாளும் ஆறுதடவை கடவுளைத் தொழுது கொண்டு எகித்து தேசத்தின் துறைமுகப் பட்டினமான கெயிரோ நகரத்திற்கு வந்து சேர்ந்தார்.
அங்கே அவர் ஒரு துருக்கியப் பெயரை விசிடிங் கார்டுகளில் (காணும் சீட்டு) அச்சடித்துக் கொண்டு வழியில் தம்மைப் பற்றிக் கேட்பவர்க்கெல்லாம் அந்தச் சீட்டில் ஒன்றைக் கொடுத்துத் தாம் கல்கத்தாவில் ஒரு பெரிய வியாபாரி என்று சொல்லிக் கொண்டு இலங்கைத் தீவின் பிரபல துறைமுகப் பட்டினமான கொழும்பு வந்து சேர்ந்தார்.
கட்டுரை : உத்தம வீரர்-வ.வே.சு. ஜயர்
கட்டுரையாசிரியர் : கே.எசு. மணியன்
இதழ் : பாலவிநோதினி
தொகுதி 7 : பகுதி 11-12 நவம்பர், டிசம்பர் 1925 பக்கம் – 324
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply