(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. பாததீர்த்தம் – அடிபெய்புயல்
    நூல் : வாயுசங்கிதை (விரோதி வரு.ஆவணி)
    நூலாசிரியர் : குலசேகர வரகுணராம பாண்டியர்
    ஆய்வாளர் : பொம்மபுரம் சிரீ சிவஞான பாலைய தேசிகராதீனத்துச்
    சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்
  2. பாங்கு * – Bank
    பேங்க் என்பதற்கு வங்கி என்பது பொருள் கொடா வகையில் இருப்பதால் (பணத்தையும் வரவு செலவையும் பாங்கு செய்யும் அமைப்பு என்று) பொருள் படும் நிலையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாங்கு எனவே கொள்ளலாம். தனியார் ஏற்பாடுகளுக்கு, வட்டிக்கடை, காசுக்கடை என்ற பழஞ்சொல்களே இருக்கலாம்.
    வெங்கடாசலம் வாழ்வியல் (திங்களிருமுறை ஆசிரியர்)
    இதழ் : வாழ்வியல் 2வது ஏடு, 15-9-1960, பக்கம் : 18
  3. Fountain – இலவந்திகை
    இக்காலத்தில் நீரைக் குறைத்தும் பெருக்கியும், அலங்காரமாக வெளியிடும் நீர் ஊற்றினை Fountain என்கிறோம். இது பெரிதும் சோலைகளில் இருப்பதையும் அறிகிறோம். இவ்வமைப்புக்குத் தமிழர்கள் அக்காலத்தில் இட்ட பெயர் இலவந்திகை என்பது.
    நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக். 23
    நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர்
    கண்ணப்ப முதலியார், எம்.ஏ.பி.ஓ.எல். தமிழ்த்துறைத் தலைவர், புதுக்கல்லூரி சென்னை.
  4. Under Ground Drainage – கரந்து படை
    இக்காலத்தில் Under Ground Drainage எனப்படும் கழிநீர் செல்லக் கட்டப்படும் அமைப்பு, பழங்காலத்தில் கரந்து படை எனப்பட்டது. இது தெரு நடுவில் அமைந்தது. கருங்கல்லால் மூடப்பட்டது. இக்காலத்தில் இரும்பு வட்டக் கருவியால் மூடப்பட்டுள்ளது.

நூல் : தமிழ் நூல் வரலாறு (1952) பக்கம் : 23
நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்.,

  1. ரீடர் – நூல் ஆய்வர்
    வெள்ளை வாரணனார் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராக (நூல் ஆய்வர்) இருக்கிறார். நல்ல பேச்சாளர். வித்துவான் பட்டம் பெற்றவர். தொல்காப்பியம், சங்க காலத் தமிழ் மக்கள், குறிஞ்சிப் பாட்டராய்ச்சி நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. சித்தாந்தச் செம்மல், திருமுறைத் தமிழ் மணி என்னும் பட்டமுடையவர்.
    மேற்படி நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக்கம் : 448
  2. தாமரைக்கண்ணி
    என் இயற்பெயர் சலசாட்சி(ஜலஜாட்சி) என்பது. 1938இல் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது புலவர் அன்பு கணபதி அவர்களும் யான் தந்தையெனப் போற்றும் அருணகிரி அடிகளாரவர்களும் என் பெயரைத் தாமரைகண்ணி என மாற்றிவிட்டார்கள். யான் அதனை விருப்புடன் ஏற்றுக்கொண்டேன்.
    தாமரைக் கண்ணி 15. 10. 1961
    இதழ் : முக்கனி மரம் – 1 கனி – 5
  3. Paper – காயிதம்
    Paper என்பதற்கு தாள் என்பதைவிட, கா + இதம் (எழுதிய நூலை இனிது காத்தற்குரிய என்ற பொருள்பட) காயிதம் என்றே கொள்ளலாம்.
  • பி.எம். வேங்கடாசலம்
    ஆசிரியர் : வாழ்வியல் (திங்களிருமுறை)
    2வது ஏடு, தி.வ. ஆண்டு 1991 புரட்டாசி – 1, பக்கம் : 18
    16.9.1960

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்