Photo Phobia_ஒளி வெருளிPhotoaugliaphobia_ஒளிர்வு வெருளி

kalaicho,_thelivoam0199& 100. ஒளி வெருளி-Photo Phobia

ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia

  ஒள் (118), ஒள்வானமலை(1), ஒளி(76), ஒளிக்கும் (6), ஒளித்த (6), ஒளித்தன்று (1), ஒளித்தாள் (1), ஒளித்தி (1), ஒளித்து (9), ஒளித்தென (1), ஒளித்தேன் (1), ஒளித்தோள் (2), ஒளிப்ப (3), ஒளிப்பன (1), ஒளிப்பார் (1), ஒளிப்பான் (1), ஒளிப்பின் (1), ஒளிப்பு (1), ஒளிப்பேன் (1), ஒளியர் (1), ஒளியவை (1), ஒளியோர் (1), ஒளிர் (13), ஒளிர்வரும் (3), ஒளிரும் (1), ஒளிவிட்ட (2), ஒளிறு (41), ஒளிறுவன (1), ஒளிறுபு (2) ஆகிய ஒளி தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சான்றுக்குச் சில:

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி, (திருமுருகு ஆற்றுப்படை :3)

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் (பொருநர் ஆற்றுப்படை : 34)

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் (குறுந்தொகை : 240.2)

புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே? (ஐங்குறுநூறு : 71.5)

மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட

ஞாயிறு தோன்றியாங்கு, (பதிற்றுப்பத்து : 64.12)

ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் (புறநானூறு : 172.7)

மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட (பதிற்றுப்பத்து : 64.12)

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் (அகநானூறு : 11.1)

வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் (நற்றிணை : 163.9)

கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான், (கலித்தொகை : 73.1)

ஃபோட்டோ போபியா (Photophobia) என்பது பயிரியலில், ஒளியைக் கண்டு அஞ்சி ஒளி மறைவிடத்திற்கு அல்லது ஒளி இல்லா இடத்திற்குச் சென்று தங்கும் பூச்சிகளின் அல்லது பிற விலங்குகளின் இயல்பினை-ஒளிஎதிர் துலக்கத்தைக் குறிக்கும். ஆதலின்

வெளிச்சம் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

ஒளி வெருளி-Photo Phobia

ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia

– இலக்குவனார் திருவள்ளுவன்