இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்தவேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று தங்களின் அறிவை விற்றால்தான் பணம் சேர்க்க முடியும் என்று கருதி அவ்விதமே செய்கிறார்கள். நான் அவர்களைக் குறைகூற வேண்டுமென்பதற்காக இவற்றைக் கூறவில்லை.

செய்தி இதழ்களில் புலவர்களுக்கும் போதிய விளம்பரம் கொடுப்பது கிடையாது. அரசியல் தலைவர்களின் பேச்சுக்கும் திரைப்பட அரசிகளின் படத்துக்கும்தான் அவை பெருமதிப்பு அளிக்கின்றன. ..

15.1.1964 அன்று  மதுரையில் நடைபெற்ற குறள்நெறி இதழ் வெளியீட்டு விழாவில் இதன் நிறுவன ஆசிரியர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

(நன்றி: குறள்நெறி 1.2.1964)