திருக்குறள் அறுசொல் உரை – 081. பழைமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல். அதிகாரம் 081. பழைமை பற்பல ஆண்டுகளாய்த் தொடரும் பழம்நட்பின் சிறப்புஉரிமை, பெருமை. பழைமை எனப்படுவ(து) யா(து)?எனின், யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. எதனாலும் கீழ்மைப்படா நட்புஉரிமை பெற்ற நட்பே, பழைமை. நட்பிற்(கு) உறுப்புக் கெழுதகைமை; மற்(று)அதற்(கு) உப்(பு)ஆதல், சான்றோர் கடன். உப்புபோல், அமையும் உரிமைச் செயல்தான் நட்பிற்கு உறுப்பு. பழகிய நட்(பு)எவன்…
திருக்குறள் அறுசொல் உரை – 080. நட்பு ஆராய்தல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 079. நட்பு தொடர்ச்சி) 02. பொருள் இயல் 11. நட்பு இயல் அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் வாழ்க்கை முழுதும் கூடவரும் ஆழ்நட்பை, ஆராய்ந்து ஏற்றல். நாடாது நட்டலின் கே(டு)இல்லை; நட்டபின், வீ(டு)இல்லை, நட்(பு)ஆள் பவர்க்கு. ஆராயா, நட்பு கேடு; ஏன்எனில், நட்புக்குப்பின் விடுபடல் கடினம். ஆய்ந்(து)ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை, தான்சாம் துயரம் தரும். ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் நட்பு, இறுதியில் சாவுத் துன்பம்தான். …
திருக்குறள் அறுசொல் உரை – 079. நட்பு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 078. படைச் செருக்கு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 079. நட்பு இணைஇலா நலம்தரும் துணையாக விளங்கும் வளர்நட்பின் இலக்கனம். செயற்(கு)அரிய யாஉள நட்பின்? அதுபோல், வினைக்(கு)அரிய யாஉள காப்பு? நட்புபோல் அரியதோர் நல்உறவும், பாதுகாப்பும், வேறு எவை? நிறைநீர, நீரவர் கேண்மை; பிறைமதிப் பின்நீர, பேதையார் நட்பு. அறிஞரின் நட்பு, வளர்பிறை; அறிவிலியின் நட்பு தேய்பிறை. நவில்தொறும்…
திருக்குறள் அறுசொல் உரை – 078. படைச் செருக்கு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 077. படை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 078. படைச் செருக்கு படைவீரரின் வீரப்பண்பு, மான உணர்வு, வெற்றிப் பெருமிதம். என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்,என்ஐ முன்நின்று, கல்நின்ற வர். பகைவரே! என்தலைவன்முன் நில்லாதீர், நின்றார் நடுகல்லாய் நிற்கிறார். கான முயல்எய்த அம்பினில், யானை பிழைத்தவேல், ஏந்தல் இனிது. முயல்குறி தப்பாத அம்பைவிட, யானை தப்பியவேல் சிறப்பு. பேர்ஆண்மை என்ப தறுகண்;ஒன்(று)…
திருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 077. படை மாட்சி நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான வீரப்படையின் சீரும், சிறப்பும். உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே, ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம். உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும், தொல்படைக்(கு) அல்லால் அரிது. அழிவிலும் அஞ்சாப் பெருவீரம், பயிற்சிப் பழம்படைக்கே எளிது. ஒலித்தக்கால் என்ஆம் உவரி..?…
திருக்குறள் அறுசொல் உரை –076. பொருள் செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 075. அரண் தொடர்ச்சி) 02. பொருள் பால் 09. பொருள் இயல் (கூழ் இயல்) அதிகாரம் 076. பொருள் செயல் வகை. செல்வத்தின் தன்மை, தேவை, சிறப்பு, திரட்டும் வழிமுறைகள். பொருள்அல் லவரைப், பொருள்ஆகச் செய்யும் பொருள்அல்ல(து), இல்லை பொருள். மதிப்பு இல்லாரையும், மதிப்பு உள்ளாராக மாற்றுவது செல்வமே. இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்; செல்வரை, எல்லாரும் செய்வர் சிறப்பு. செல்வம் இல்லாரை, எல்லாரும் இகழ்வார்; உள்ளாரைச் சிறப்பிப்பார். பொருள்என்னும் பொய்யா விளக்கம்,…
திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி) 02. பொருள் பால் 08. அரண் இயல் அதிகாரம் 075. அரண் நாட்டிற்குத் தேவையான இயற்கை, செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள். ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம் போற்று பவர்க்கும் அரண். போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும் கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் காடும், உடைய(து) அரண். ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள் காடுகள் கொண்டது அரண். உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின் அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல். …
திருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 073. அவை அஞ்சாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 07. நாட்டு இயல் அதிகாரம் 074. நாடு நாட்டின் இலக்கணம், சிறப்புகள், நாட்டு மக்கள்தம் பண்புகள். தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்(வு)இலாச் செல்வரும், சேர்வது நாடு. தொடர்விளைவு, தக்கார், உயர்மனச் செல்வர், இருப்பது நல்நாடு. பெரும்பொருளால் பெள்தக்க(து) ஆகி, அரும்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. பெரும்பொருளால், கேடும் இல்லா நிறைவிளைவால், அமைவது நாடு. பொறைஒருங்கு மேல்வரும்கால்…