இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 7கடலாண்ட காவலர் சேரன் காலாட்படை தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட செங்குட்டுவன் கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்”1 என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான். கடற் கடம்பர்இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல்…

குவிகம் இலக்கிய வாசல்,  குறும்புதினப் போட்டி முடிவு அறிவிப்பு

குவிகம் குறும்புதினப் போட்டியில் வெளியீட்டிற்குத் தேந்தெடுக்கப்பட்ட குறும் பதினங்களிலிருந்து அரவிந்து சுவாமிநாதன் அவர்கள் அறிவிப்பார் நிகழ்வில் இணைய நுழைவெண் Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி passcode  ilakkiyam அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib

வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும்

(வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அ. கொடைநலமும் படைவலமும் ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள் ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திருவள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களை நயம்பட உரைக்கிறார், தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக்கத் திருவள்ளுவர்…

சட்டச் சொற்கள் விளக்கம் 196 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 191-195: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  196 – 200 196. Absention from intoxicants (குடி) விட்டொழிப்பவர்     குடிப்பழக்கத்தைக் கைவிடுதல் என்பது மதுபானங்களையும் போதைப்பொருள்களையும் முற்றிலும் தவிர்ப்பதற்கான நடைமுறையாகும்.   மது பானங்களைக் கைவிடும் பொழுது போதையில்லா நல்ல குடிவகைகளை அருந்தலாம்.   மதி மயக்கம் தருகின்ற, வெறிஊட்டுகின்ற போதைப் பொருள்களை விலக்குதல் என்பது சமயம், நல் வாழ்வு, உடல் நலம், மெய்யியல்,குமுகம் போன்ற எதன் கரணமாகவேனும் இருக்கலாம்.   காண்க: Abstaine  …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை- தொடர்ச்சி) பூங்கொடிசொற்போர் புரிக பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில்கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல்சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல்அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச்சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ?திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கைஉரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125 பூங்கொடி துணிபு சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் 135கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல்என்னின மக்கள் எறிகல் பட்டுச்செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்கமாய்தல் பெறின்நான் மனங்கொள ஏற்பேன்;…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120 (கவிஞர் சுரதா, கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

சட்டச் சொற்கள் விளக்கம் 191-195: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 186-190: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  191-195 191. absentee           வராதவர், இல்லாதவர்   வசிப்பிடம் அல்லது பணியிடம் முதலான வழக்கமாகக் காணப்படும் இடத்தில் இல்லாதவர்.             காணாமல் போன ஒருவர் அல்லது எங்கே இருக்கிறார் என அறியப்படாதவர் வருகை தராதவராகக் கருதப்படுகிறார். சமூகம் (Presence) அளிக்காதவர் எனக் குறிப்பிட்டு வந்தனர். 192. Absentee land lord   வராத /செல்லா நிலக்கிழார்;   நிலத்தில் தங்கா நிலக்கிழார், வருகைதரா நிலக்கிழார்,…

அரசிடம்தான் அறநிலையத்துறை இருக்க வேண்டும் – கருத்தரங்கம்

அரசிடம்தான் அறநிலையத்துறை இருக்க வேண்டும் – கருத்தரங்கம் திராவிட நட்புக் கழகம் மாசி 27, 2054 / 10.03.2024 மாலை 6.30-8.30 சுப.வீரபாண்டியன், நிறுவனர்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 – அன்பு மூர்த்திகள் மூவர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46.2 – தொடர்ச்சி என் சரித்திரம் அத்தியாயம்-47 அன்பு மூர்த்திகள் மூவர் திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும்மாலையிலும் முறையாக நடந்து வந்தன சுப்பிரமணிய தேசிகருடைய அன்புஎன்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது பிள்ளையவர்களுக்குஎன்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவுகாட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும்நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்தஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகத்தர்கள் என்னிடம்பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனேகொடுத்து உதவித் தங்கள்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம் புலிகேசன்வடநாட்டில் உள்ளது வாதாபி நகரம்1. அந்நகரில் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர் சளுக்கர் குல வேந்தர். அக் குலத்திலே தோன்றினான் புலிகேசன் என்னும் வீரன். அவனது படைத்திறங்கண்டு நடுங்கினர் பகைவரெல்லாம். மண்ணாசை பிடித்த புலிகேசன் கங்கரையும் கதம்பரையும் வென்றான்; அவர் ஆண்ட நாடுகளைக் கவர்ந்தான். மாளுவநாட்டு மன்னனும் அவனடி பணிந்தான். புலிகேசன் பெற்ற வெற்றிகளால் வாதாபி நகரம் ஏற்றமும் தோற்றமும் அடைந்தது. நரசிம்மனும் புலிகேசனும்அக்காலத்தில்…

வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2

(வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்-தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 5. சொல்லும் செயலும் பின் பகுதி இங்ஙனம் நால்வகை வன்சொற்களைக் கடிந்து பேசிய கவிஞர்பெருமானாகிய திருவள்ளுவர், எவரிடத்தும் இன்பத்தைப் பெருக்கும் இன்சொல்லையே பேசுக என்று வேண்டுவார். அதுவே துன்பத்தை மிகுவிக்கும் வறுமையைத் தொலைப்பதாகும். இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவதாகும். இன்சொல் கூறுவானின் பாவங்கள் குறைந்து தேயும். புண்ணியங்கள் வளர்ந்து பெருகும். இவ்வாறு பன்னலம் விளக்கும் இன்சொல்லே தனக்கும் இன்பம் தருவதை அறிந்த ஒருவன் என்ன கருதி…

சட்டச் சொற்கள் விளக்கம் 186-190: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 181-185: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  186-190 186. Absence, leave of   வாராததிற்கான அனுமதி   வராமைக்கான இசைவு   வர வேண்டிய நேர்வில் உரியவர்களிடம் முன் இசைவு பெற்று வராமையைக் குறிப்பிடுகிறது. 187. Absent இராத வந்திராத, இல்லாத   காண்க: absence   Present என்பது நேர்வந்திருத்தல்/நேர் வருகை எனவே, Absent   என்பது நேர் வராமை. 188. Absent minded கவனக்குறைவான   மறதியான நினைவற்ற 189. Absent on leave விடுப்பில்…