வெருளி நோய்கள் 589-593: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 584-588: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 589-593 589. ஓவிய வெருளி –  Pictophobia ஓவியம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஓவிய வெருளி. சிலர் எந்தவகை ஓவியமாக இருந்தாலும் பேரச்சம் கொள்வர்.சிலர், வரலாற்று ஓவியம், காதல் ஓவியம், சுற்றுலா இட ஓவியம், மக்கள் ஓவியம், விலங்கினங்கள் ஓவியம், பறவைகள் ஓவியம், தொன்மக்கதை ஓவியம், அச்சுறுத்தும் உருவ ஓவியம் எனக் குறிப்பிட்ட சிலவகை ஓவியங்கள் மீது மட்டும் பேரச்சம் கொள்பவர்களாக இருப்பர். 00  590. கசப்பு வெருளி – Acrisophobia    கசப்புச் சுவை…

வெருளி நோய்கள் 584-588: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 584-588  585. ஓநாயன் வெருளி – Lupophobia / lycophobia/ Lukophobia ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி. ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர். ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான். lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய். 00 586. ஓமர் வெருளி – Homerphobia புனைவுரு  ஓமர் (Homer Simpson) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓமர் வெருளி. அமெரிக்க அசைவூட்டத்…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 3 மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவத்தைப் போற்றுகிற நாம் இந்த இரண்டு இலக்கியங்களுக்கு – இலக்கியங்கள் என்று சொல்லக்கூடாது இழிகாம நூல்களுக்கு – அஃதாவது ஆபாச நூல்களுக்கு –  நாம்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 8 பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு…

கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்

(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம்…

வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 579-583 579. ஓக்கலகோமா வெருளி- Oklahomaphobia  ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி. ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம்  ஓக்கலகோமா நகரம். 00  580. ஓங்கில் வெருளி  – Phocodelfiniphobia / Delfiniphobia ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி. ஓங்கில் / கடற்பன்றி என்பது திமிங்கில இனத்தைச் சேர்ந்தது. Dolphin/தால்பின் என்பதைத் தமிழில் கடற்பன்றி என்றும் கூறுகின்றனர். கடற்பன்றி…

வெருளி நோய்கள் 574-578: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 574-578 574. ஒறுப்பு வெருளி- Rhabdophobia/ Rhobdophobia/ Mastigophobia/Poinephobia தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி. குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல்  போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம்  கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல்…

வெருளி நோய்கள் 569-573: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 564-568: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 569-573 569. ஒளி வீச்சு வெருளி – Selaphobia ஒளி வீச்சு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி வீச்சு வெருளி. கால் கை வலிப்பு உள்ளவர்களும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் பெரிதும் ஒளி வெருளி உள்ளவர்களாக உள்ளனர். இத்தகையோர் இரவில் வெளியே செல்வதையும் இரவு மன்றங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். selas என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ஒளி எனப் பொருள். காண்க: ஒளி வெருளி (Photophobia) 00 570. ஒளி வெருளி-Photo Phobia  வெளிச்சம் கண்டு ஏற்படும்…

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 146 & 147 + நூலரங்கம்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)    தமிழே விழி!                                                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 146 & 147; நூலரங்கம் ஐப்பசி 08, 2056 ஞாயிறு 26.10.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…

வெருளி நோய்கள் 564-568: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்) 564. ஒவ்வாமை குறுமி வெருளி – Erisphobia ஒவ்வாமை குறுமி(dwarf planet Eris) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒவ்வாமை குறுமி வெருளி. dwarf என அழைக்கப்படுவதை உயர்திணை போல குள்ளன் என்பது தவறு. dwarf planet  என்பதைக் குறுங்கோள் >குறுமி எனச்சொல்ல வேண்டும்.  00 565. ஒவ்வாமை வெருளி-Anaphylaxophobia /Allergiphobia ஒவ்வாமை(Allergy) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒவ்வாமை வெருளி. உணவு ஒவ்வாமை, பயன்பாட்டுப் பொருள் ஒவ்வாமை, வளர்ப்பு விலங்குகள் அல்லது பறவைகள் ஒவ்வாமை போன்ற பல ஒவ்வாமைகள்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail,receipt ? case என்றால் என்ன பொருள்? நீங்கள் எந்தத் துறை? ? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது? ‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர்…

வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 554-558 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 559-563  559. ஒலிப்பிக் கடிகார வெருளி –  Xypnitiriphobia மணிஒலிப்பிக் கடிகாரம்(alarm clock) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிப்பிக் கடிகார வெருளி. விழிப்பிற்காக மணியை ஒலிக்கச்செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குரிய மணிப்பொறி, ஒலிப்பிக் கடிகாரம் ஆகும். 00 560. ஒலிம்பிய வெருளி – Olympicphobia ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிம்பிய வெருளி. பேரார்வமும் விடாமுயற்சியும் அளவற்ற நம்பிக்கையும் இருப்பினும் மறுபுறம் வாகைசூட இயலுமா என்ற கவலையும் சேர்வதால் ஒலிம்பிக்குப் போட்டிகளில் பங்கேற்பதில் பேரச்சம்…