தமிழகம் முழுவதும், மலிவு விலை காய்கறிக் கடைகள் – முதல்வர் ஆணை

சென்னை :  திசம்பர் 11: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மாநாட்டில்  தொடக்கவுரையாற்றிய பொழுதுமுதல்வர் செயலலிதா, “விலைவாசியைக் கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை – காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற  காய்கறிக்கடைகளை, மாவட்டங்களில் தேவையான இடங்களில் தொடங்க, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டார்.

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…

கச்சத்தீவை இந்தியாவின் பகுதியெனப்பறைசாற்றுக! – த.இரா.பாலு

அன்று அமைதி காத்த தி.மு.க. இன்று கழுவாய்  தேடுகிறது! புதுதில்லி: இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி மக்களவையில் 11.12.2013 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் வினாக்கள் எழுப்பினர். இச்சிக்கல் குறித்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமாரிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 11.12.13 அன்று காலை மக்களவை கூடியதும் முறையீடு அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: கச்சத்தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம். அதனை 1974 ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து…

அமஅநியில் (AIIMS) 228 பணியிடங்கள்

  மத்திய நல்வாழ்வு-குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்ப்  புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுனத்தில்(AIIMS)  ஒழிவிடமாக உள்ள “ஆ”, “இ” பிரிவு (குரூப் “பி” மற்றும் “சி” ) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், அலுவலகம் சார்ந்து  16 வகை பணிகளில் மொத்தம் 228 ஒழிவிடங்கள் உள்ளன. அகவை உயர் வரம்பு பணிகளுக்கேற்ப 25 முதல் 40 வரை உள்ளன.   இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 31.12.2013 விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்:…

தீயக் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! கச்சத்தீவை மீட்போம்! – முதல்வர்

முதல்வர் செயலலிதா தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள்- காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் முதல் நாளில்(11.012.13), முதல்வர் செயலலிதா தொடக்கவுரை யாற்றினார். அப்பொழுது, தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும்   தீயக்குழுக்களைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் செயலலிதா தெரிவித்தார்.  “ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், மிகவும்  நலிவுற்ற பிரிவினர் நலன் ஆகியவற்றுக்காக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. தமிழகம் தேசிய அளவில் பல…

இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் – கனடா உறுதி!

மனித உரிமை, சட்டம் ஒழுங்கு,  சமயஉரிமை போன்றவற்றில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கனடா, இத்தகைய நிலைப்பாட்டில் இலங்கை அரசு போதிய பற்றுறுதியைக் காட்டவில்லை என்பதைக் காரணம் காட்டி, அண்மையில் இடம்பெற்ற பொதுவள மாநாட்டில் கனடியத் தலைமையாளர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. இதற்கிணங்க, மனிதநேயம் மிக்க, கனடியத் தலைமையாளர் இசுடீபன் ஆர்பர் இனப்படுகொலை நாட்டில் கொலையாளிக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கும் பொதுவளஆய மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே! இருப்பினும்,  கனடாவில் சார்பில்  கனடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒபரோய்…

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் மழலையர் கற்றல் கொண்டாட்டம்

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உலக மாந்த உரிமை நாளான திசம்பர் 10 அன்று ‘மழலையர் கற்றல் கொண்டாட்டம்’ சிறப்பாய் நடந்தது. திரைப்பட நடிகர் தோழர் இராமு அவர்களும் எழுத்தாளர் வழக்குரைஞர் நடராசன் அவர்களும் மழலைச் சொல் பதிப்பகம் தோழர் மலர்விழி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மழலையர் தங்களின் கற்றல் திறனை மகிழ்வாய் வெளிப்படுத்தினர். பல்வகைப் படங்களை, கற்றல் துணைக் கருவிகளை, விளையாட்டுப் பொருட்களை அடுக்கி, வகைப்படுத்தி, முறைப்படுத்தி தானாயும் தன் நண்பர்களோடு குழுவாயும் கற்று மகிழ்ந்த காட்சி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது….

தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 3

 தமிழ்வழிப் பள்ளி அமைப்புகளும் பள்ளிகளும் கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழியில், தமிழிய உணர்வுடன் நடைபயின்று வருகின்றன தமிழ்வழிப் பள்ளிகள். ஒத்தக் கருத்தினால் ஒன்றுபட்டுச் செயல்படுதல், அவ்வழி தமிழ் வழிக் கல்வி விழிப்புணர்வை நம் தமிழ் நாடெங்கும் எடுத்துச் செல்வது, பள்ளிகளை மேம்படுத்துவது என்ற நிலையில் தமிழ் வழியில் நடந்த பள்ளிகள் அமைப்புகளாக ஒன்று சேர்ந்தன. தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு 1997 இல் தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சென்னை அதன் சுற்றுபகுதியில் இயங்கிய தமிழ்வழிப் பள்ளிகள், பள்ளிகளைத் தொடங்க இருந்தவர்களும்…

கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

– திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன் விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்! வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்! அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்! ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்! பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள் பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்! எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும் ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்! வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா? எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும் இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே! பறித்தவாழ்வை யார்தருவார்? பாவிகளே! பிள்ளை பெற்றவளின் வயிறெரியப் பச்சை மண்ணைச் சுட்டீர்!…

சிற்றிந்தியாவில் பேருந்துமோதி இளைஞர் மரணம் – வன்முறை வெடித்தது

சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரம்!  இன்று (08.12.13) இரவு, பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு (அகவை 33) என்பவர்,  கடந்த ஈராண்டுகளாக, எங்கு அப்பு சூன் (Heng Hup Soon) என்னும்  நிறுவனத்தில் கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார்.  இவரே அந்த இளைஞர் என  அடையாளம் காணப்பட்டுள்ளது.  பேருந்து மோதி இறந்ததாகச் செய்தித்தாள்களில் வந்திருந்தாலும், அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர்  இறப்பு குடும்பத்தினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் …

வட மாநிலத் தேர்தல் : காங்கிரசு துடைத் தெறியப்பட்டது

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2013   (அடைப்பிற்குள் கடந்த தேர்தல் முடிவுகள் குறிக்கப் பெற்றுள்ளன.)   மாநிலம்   மொத்தத் தொகுதிகள் பா.ச.க. காங். ஏழை மக்கள் கட்சி பிற தில்லி   70 31(23) 8(43) 28(-) 3(4) இராசசுதான்  200 162 21   16(3)- மா; 0(23)   மத்தியப்பிரதேசம் 230 165(143) 58(71)   7(7) – ப; 0(7) சத்தீசுகர் 90 49(50) 39(38)   2(2) மா – மார்க்சியப் பொதுவுடைமை ப –  பகுசன்  …

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் பொழிவு – 125

  நாள் : கார்த்திகை 17, தி.பி.2044  செவ்வாய்  திசம்பர் 10, கி.பி.2013  மாலை 6.00 மணி   இடம்:  எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், சென்னை   தலைப்பு : இளவரச அமிழ்தன் கவிதைகள்   தலைமை : முனைவர் இ.சுந்தரமூர்த்தி ஏற்புரை :  முனைவர் இளவரச அமிழ்தன்   வாழும் கவிஞர் பாநலன் போற்றிட வாரீர்!   ஒய்எம்சிஏ பட்டிமன்றம் சென்னை 600 001