சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2013

 

(அடைப்பிற்குள் கடந்த தேர்தல் முடிவுகள் குறிக்கப் பெற்றுள்ளன.)

 

மாநிலம்  

மொத்தத் தொகுதிகள் பா.ச.க. காங். ஏழை மக்கள்

கட்சி

பிற
தில்லி

 

70

31(23)

8(43) 28(-) 3(4)
இராசசுதான்  200 162 21   16(3)- மா;

0(23)

 

மத்தியப்பிரதேசம் 230 165(143) 58(71)   7(7) – ப;

0(7)

சத்தீசுகர் 90 49(50) 39(38)   2(2)
மா – மார்க்சியப் பொதுவுடைமை

ப –  பகுசன்

   

sheila-dixit 2

தில்லித் தேர்தலில் காங்.முதல்வர் சீலாவை முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட  ஏழை மக்கள்கட்சித் தலைவர் அரவிந்து தன்னுடைய தேர்தல் முத்திரையான சின்னம் கொண்டு துடைத்தெறிந்தார். மூன்று முறை முதல்வராக இருந்த சீலாவும் அவரது அமைச்சர்கள் பலரும் தோல்வியைத் தழுவினர். காங். ஒற்றைப்பட எண்ணிக்கையில்தான்  வெற்றியை அடைய முடிந்தது.

 kejriwal 1

 மத்தியப்பிரதேசம், சத்தீசுகர் மாநிலங்களில் பா.ச.க. மீண்டும்  ஆட்சியை அமைக்கின்றது. இராசசுதானில் காங்கிரசிடமிருந்து ஆட்சியைப் பா.ச.க. மீட்டது.

தேர்தல் முடிவுகள் குறித்து, நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுவதாகவும், மக்களவைத் தேர்தலில் மாற்றம் ஏற்படப் போவது உறுதி என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

காங்கிரசு, பாசக இரு கட்சிகளுக்குமே எச்சரிக்கையாக இருக்கும் படி பொதுமக்கள் இந்தத் தேர்தல் மூலம் அறிவுறுத்தியுள்ளனர். இனிமேலும் தவறுகளைத் தொடர்ந்தால் முற்றாகத் தூக்கியெறிய அவர்கள் தயங்க மாட்டார்கள்என ஏழை  மக்கள் கட்சித்தலைவர் அரவிந்து தெரிவித்துள்ளதே சரியாகும்.

ஆதலின், பொதுவாகப் பா.ச.க. வெற்றி பெற்றிருந்தாலும் மக்கள் ஒன்றைப்புரிய வைத்திருக்கின்றனர். நம்பிக்கைக்குரிய மாற்றுக் கட்சி இருந்தது என்றால் காங்.போல் பா.ச.க.வும் துரத்தப்படும் என்பதே அந்த உண்மை.