முதல்வர் செயலலிதா தலைமையில்,

நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள்- காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் முதல் நாளில்(11.012.13), முதல்வர் செயலலிதா தொடக்கவுரை யாற்றினார். அப்பொழுது, தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும்   தீயக்குழுக்களைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் செயலலிதா தெரிவித்தார்.

jayalalitha collectorconference1

 “ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், மிகவும்  நலிவுற்ற பிரிவினர் நலன் ஆகியவற்றுக்காக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. தமிழகம் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது”    என்றும் அவர் குறிப்பிட்டார்.

  தமிழக மீனவர் சிக்கல்:

 “இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக, நமது பரம்பரை, பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது தமிழக மீனவர் குமுகாயத்தில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு  தலைமையாளருக்குப் பலமுறை கடிதம் எழுதினேன்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், கடந்த 1974- ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை மீட்பது ஒன்றே இலங்கைச்சிக்கலுக்கு நிலையான  தீர்வை ஏற்படுத்த முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.