நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்

நாம் இரண்டல்ல ஒன்றெனச் சொல்லுங்கள். கடற்கோள்கள் பிரித்த தமிழாண்ட தேசங்கள்.. அடிமை தேசங்களாய்… அவனியில் இன்று.. ஆயினும் உணர்வழியா இனமாய்.. ஒன்றெனச் சொல்லுங்கள். உரத்துச் சொல்லுங்கள்.. எங்கள் இனம் இன்று ஒன்றானதென்று! இல்லை என பார்ப்பவர்கள் பகைவர்கள்! . பிரித்துப் பார்ப்பவர்கள் பித்தர்கள்…!! ஒன்றான மாந்தர் ஒன்றுபட்ட இனம்.. ஒற்றை தாய் மொழி.. கடல் பிரித்த தேசங்கள்.. இரண்டானாலும் தமிழினம் என்றும்… ஒரு குடி காண்! ஒற்றுமை ஒன்றே உயர்வெனக் கொண்ட வேற்றுமை இல்லா தமிழர் நாம்!.. ஒன்றே எம் இலக்கு. விடுதலை எம்…

வளைகுடா வானம்பாடியின் சித்திரைக் கூட்டம்

குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம்,  அன்னையர்  நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு,  பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு,  பொறியாளர் நடராசன், பொறியாளர்  முனைவர் பால் மனுவேல், பொறியாளர் திரு சேகர் அவர்கள்  முன்னிலையேற்றார்கள். விழாவில்  கவிஞர்கள், பாடகர்கள்,  அன்னையர் நாளைச்  சிறப்பித்து, கவிதை, சிறப்புச் சொற்பொழிவு, பாடல் எனத் தங்களின் படைப்புகளை வழங்கினார்கள். விழாவில்…

நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே

ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவைப் பார்த்தோம் கண்களை மூடி இது உன் விதி என்றது எங்களின் வீட்டினுள் யூதர்கள் நுழைந்தனர் யேசுவைக் கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் அடையாளம் காட்ட யூடாசு வந்தான் மாவீரன் கல்லறையில் மீண்டும் இரத்தம் வடிய உயிர்த்திருந்தவர்களை இன்னொருமுறை புதைத்தனர் கனவுகள் உடைந்து…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

சங்கக் கால இலக்கிய அகத்திணை மரபுகளும் இலக்கியச் செல்நெறிகளும் – ஓர் அறிமுகம் உரை: பேராசிரியர். இ.பாலசுந்தரம் சிறப்பு விருந்தினர்கள் உரை: திருமதி.செல்வம்  சிரீதாசு திருமதி. (இ)லீலா சிவானந்தன் திரு. அருள் சுப்பிரமணியம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:சித்திரை 13, 2045 / 26-04-2014 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

   தமிழ் மொழித் திங்கள் விழாவின் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏப்பிரல் 5, 2014 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியது.   தமிழ் வாழ்த்துடன்  விழா தொடங்கியது. சிங்கப்பூர் சுற்றுப்புற நீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அடுத்த அங்கமாகக் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் உரை நிகழ்த்தினார். பின்னர் மாணவமணிகள் கலந்து கொண்ட மாறு வேடப்…

வளைகுடா வானம்பாடிகளின் ஏப்பிரல் கூட்டம்

      குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக  திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை வாசித்தல், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல நிகழ்வுகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்தனர். நிகழ்ச்சிக்குப் பல அமைப்பின் நண்பர்களும், குவைத்…