சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!
சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை! உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னையில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளது உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு. இந்த அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் ஆடி 14, 2047 / 29-07-2016) காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்கினி அவர்கள் தலைமையில் நடந்தது. முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள்…
தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை, பெண்களுக்கான போட்டிகள்
: தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள் ஒவ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் கீழே: போட்டி எண் 1 திரு. காமராசர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’ விதிமுறைகள்: போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம். (பள்ளி மாணவர்கள் தவிர) குறைந்தது 4 பக்கம் முதல்…
மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்
மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன் இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு சென்னையில் ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார். இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…
யாழ்.பல்கலையில் இனவெறி மோதலைத் தூண்டும் சிங்கள அரசு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி இனவெறியைத் தூண்டுவதைக் கண்டனம் செய்! இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின்பொழுது, மாணவர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் ஆடி 01, 2047 / சூலை 16, 2016 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி, தமிழர் எதிர்ப்பு இனவெறிச் சீற்றத்தைத் தூண்டி விடுவதற்கு, அரசின் பகுதியினரும் முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சவைச் சூழ்ந்து கொண்டுள்ள இனவெறிக் கும்பலும் மேற்கொள்ளும் முயற்சிக்குப் பொதுவுடைமை நிகருரிமைக் கட்சியும் (சோசலிச சமத்துவக் கட்சி – சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான (சமத்துவத்துக்கான)…
புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை
புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை புதிய கல்விக் கொள்கை என்ற மத யானையைத் தமிழகத்தில் நுழையவிடக் கூடாது எனத் தமிழக அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய அறிக்கையில் இது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: ”மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எசு.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய…
தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம்
தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம் உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? என்று மரு.இராமதாசு அறிக்கை வழி வினா எழுப்பிக் கண்டித்ததுள்ளார். பா.ம.க நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விந்தையான தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் வாதிட்ட முறையீட்டாளர் தமது தரப்பு வாதுரையைத் தமிழில் கூறியதை ஏற்க முடியாது எனக்…
வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்
வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…
குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !
குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்! வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர் தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …
தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 Thamizh Academy Awards – 2016 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited) திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் – Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணிணித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015ஆகிய 4 நான்கு ஆண்டுகளாக…
‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்
‘இலக்கியச் சோலை’ மாத இதழ் சார்பில் தந்தையர்நாள் நிகழ்ச்சி வைகாசி 30, 2047 / 12-06-2016 அன்று காலை, சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது. ‘அப்பா – அப்பப்பா’ தலைப்பில் கவியரங்கம். நீங்களும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்குத் தொடர்பு கொள்க: 98405 27782.
இந்தியன் குரல் : சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள்
சமூக ஆர்வலர்களே ! வணக்கம். ஒருவர் ஆற்றிலோ கடலிலோ விழுந்தால் காப்பற்ற யாரேனும் வருவார்கள். ஆனால் அவர்களே சாக்கடையில் விழுந்தால் அவர்கள் அண்மையில் இருப்பவனும் நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவானே ஒழிய காக்க வரமாட்டான். “யாராவது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று கூவிக்கொண்டுதான் இருப்பான். அதுபோலவேதான் நம் மக்கள் நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூவுவதும். அவர்களைக் கொண்டு தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நடக்கிறது யாராவது அரசியலுக்கு வரவேண்டும் என்பதும் வந்தவர்களை வாழ்த்தி வரவேற்பதும் உங்களைச் சாக்கடையில் தள்ளிவிட்டு நாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டு தப்பி ஓடுகின்றோம் என்று அம்மக்கள் உணர்த்தத்தான். இதையறியாமலோ அறிந்தோ சமூக ஆர்வலர்களும்,…
அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.
அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும். அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல
