எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் – தமிழியல் விருது 2014
தனித்தமிழ் பேசுவோம்!
தாய்த்தமிழ் காத்துயர்வோம்! மக்களால் பேசப்படும் மொழியே வாழும்! நம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும், குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம் மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக் காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின். இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக்…
எமது போராட்டம்: வெறும் நிகழ்வா? அல்லது வரலாறா?
எமது போராட்டம்: வெறும் நிகழ்வா அல்லது பெருமைக்குரிய வரலாறா என்பதை நீங்கள்தான் வரையறுக்க வேண்டும் – கலாநிதி இராம் சிவலிங்கம் அணையாமல் இருக்க காற்றோடு போராடுவதை வாழ்வாகக் கொண்ட மெழுகுவர்த்தி போல், ஈழம்வாழ் எம் உறவுகளும் அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் மத்தியிலே, சிங்கள அரசின் இன அழிப்பிலிருந்து தம்மைத் தாமே காப்பாற்ற, போராட வேண்டிய துயரய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யாரப்பா காரணம்? தரமில்லா புலம் பெயர் அணிகளும், தகுதியில்லா அதன் தலைமைகளுமல்லவா? எமது பூமியையும், அதன் பூர்வீகக்குடிகளான எம் உறவுகளையும் நாளுக்கு நாள்…
திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு
என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப் பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறுதான் தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது. எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம்…
நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும்
இப்பொழுது (ஏப்பிரல் 24, 2014) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும் எனும் நோக்கில், தேர்தல் களம் அமைந்துள்ள சூழலை, உண்மை நோக்கில் பார்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது. இந்திய ஒன்றியத்தில் வாழும் மொழிவழி இனங்கள், எவ்வகையிலும் ஆளுமையுரிமை அடைந்துவிடக் கூடாது என்பதில், ஆரியம் (பிராமணியம்) கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகிறது. தனது கரவான நோக்கம் நிறைவேற, ஆரியம் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் சிறப்பாக எடுத்து செயற்பட்டு வெற்றியடைகிறது. இந்திய ஒன்றியத்தின் மறைந்த தலைமை அமைச்சர் மதிப்புமிகு வி.பி.சிங்…
கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு [Certificate Course in Fundamental & Usage of Tamil Computing] 05.05.14 – 30.05.14 எனும் ஒருமாதக்காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் திஇராநி (எசுஆர்எம்) பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும்….
மே முதல் நாளை பாரதிதாசனார் நினைவுநாளாகக் கொண்டாடுவீர்! நாவலர் வேண்டுகோள்:
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்கை எய்தினார்; மறைந்துவிட்டார்! அவருடைய எடுப்பான தோற்றத்தை இனிக் காண முடியாது! செஞ்சொற் கவிதை இன்ப ஊற்று அவரது எழுதுகோலிலிருந்து இனி பீரிட்டெழும்போது; அவர் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டார் & என்பதையெல்லாம் எண்ணவே நெஞ்சம் கூசுகிற; சொல்ல நா தழுதழுக்கிறது! தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் தமிழ்க் கவிஞரெனத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மறைவு பொதுவாகத் தமிழகத்திற்கு குறிப்பாக கவிஞர் கவிஞர் உலகிற்கு ஈடு…
இணைவதை யாராலும் தடுக்க முடியாது – கலாநிதி இராம் சிவலிங்கம்
புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது — கலாநிதி இராம் சிவலிங்கம் விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகைமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காகப் போராடும்போது, எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது குடிவழி எம்மை மதிக்குமா…
மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு – 2014
அன்பார்ந்த தமிழ் உறவுகளே… வணக்கம். மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014) என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள், மியன்மா நாட்டின் வணிக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும். உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மலேசியா-சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் பதிவு செய்ய – தொடர்பு கொள்ள வேண்டுபவர் & மியன்மா ஒருங்கிணைப்பாளர்…
தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
பேரன்புடையீர், வணக்கம். தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும் அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும் வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர், ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….
கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு- மின்மடல் இழை
கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு (மார்ச்சு 30, மாநிலக்கல்லூரி, சென்னை) மின்மடல் இழை அன்புள்ள தமிழ் ஆர்வலர்களே, வரும் கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாவது மாநாட்டில் ‘ தமிழ்மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி’ என்பதே மையக் கருத்தாக அமைகிறது. எனவே மாநாட்டிற்குமுன்பே அதுபற்றி இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தமிழகத்தில்மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் தமிழ்மொழித் தொழில்நுட்பத்தில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவைபற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் இந்த மின்மடல் இழை தொடங்கப்படுகிறது. மொழித்தொழில்நுட்பம் ( Language Technology) பேச்சுத்தொழில்நுட்பம் (Speech Technology) ஒளிவழி எழுத்துணர்த் தொழில்நுட்பம் (Optical…
சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி — ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014
தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014 ஆர்வலர்களுக்கு அழைப்பு தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர் பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின் அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப் பயன்படும். இதில் சிறுவர் பாடல் என்பது எப்படி இருத்தல் வேண்டும்? தனித்தமிழ்ச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது? சிறுவர்க்கான பாடுபொருள்கள் எவை? சிறுவர்க்கு…