மறு வாசிப்பில் சுந்தரராமசாமி – இலக்கியவீதியின் நிகழ்ச்சி
சித்திரை 15, 2046 / ஏப்பிரல் 28, 2015
சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்
புரட்சிக்கவிஞர் 125 ஆம் பிறந்தநாள் விழா 36ஆம் ஆண்டு தமிழர்கலைபண்பாட்டுப் புரட்சிவிழா சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம் சித்திரை 12 & 13, 2046 25.04.2015 & 26.04.2015 சனி & ஞாயிறு தமிழவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இசைத்தமிழறிஞர் விபுலானந்த அடிகள், பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் பொதுவரங்கம் தமிழர்தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் முனைவர் மா.நன்னன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிஞர்…
புகழ்ச்செல்வி 100ஆவது இதழ் வெளியீட்டு விழா
சித்திரை 22, 2046 / மே05, 2015 பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தொப்புள்கொடி உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்தும். நமது புகழ்ச்செல்வி இதழின் 100 ஆவது வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சித்திரை 22, 2046 – 5.5.2015 இல் நடக்க இருக்கின்றது. அந்நிகழ்வுக்கு உங்களை நேரில் பார்த்து அழைக்க விருப்பம் இருந்தாலும் காலமும் பொருள்நிலை சூழலும் இடம் கொடுக்க வில்லை ஆகையால் உங்கள் அகத்திற்கே வந்து தருவதாய் எண்ணி வருகை தாருங்கள் நம் இதழ் விழா என்றே இப்படிக்கு உங்கள் உறவான — பரணிப்பாவலன்
2 அகவை சி.கா.பொன்னெழிலி திருக்குறள் ஒப்பித்தல் விழா
சித்திரை 18, 2046 / மே1, 2015 திருச்சிராப்பள்ளி
சரசையூர் ம.கங்காதரம் நூல் அறிமுகவிழா
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் உப அதிபர் சரசையூர் ம.கங்காதரம் அவர்களின் நூல் அறிமுகவிழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் இடம்பெறவுள்ளது. . கணிதத் துறைப் பட்டதாரியாகிய இவர் கைவரி வல்லுநராகவும் விளங்குகின்றார். சரசாலை சரசுவதி வித்தியாலயம் மற்றும் மட்டுவில் கமலாசனி வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் தமிழ்மேற் கொண்ட தீராக் காதலினால் பயன்பாட்டுக்கணக்கையும் தூய தமிழிலேயே கற்பித்தார். . ஏ, பி, சி ஒரு முக்கோணம் என்பதற்கு மாற்றாக அ, ஆ, இ ஒரு முக்கோணம் என கணக்குக் கற்பித்தார். அவர்…
பகுபடைத்தலைவர் பால்ராசின் ‘சமர்க்கள நாயகன்’ நூல் அறிமுக விழா
தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பகுபடைத்தலைவர் பால்ராசு 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர். தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாகச் செயற்பட்டவர். இவரது நினைவுகளைச் சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியீடப்பட்ட நூல் …
ஈழமும் பன்னாட்டுச் சதிகளும் – ஈரோட்டிலும் கோபியிலும் கருத்தரங்கம்
கோபியில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் காலை10 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். ஈரோட்டில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் மாலை 5 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். மே17 இயக்கம் தவறாமல் வருக!
பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி 21 ஆம் ஆண்டுவிழா
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00 http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
சாதியும் சமயமும் – ஒரு பன்மய விவாதம் சேலத்தில் முழுநாள் கருத்தரங்கம்!
“சாதியும் மதமும் – ஒரு பன்மய விவாதம்” என்ற தலைப்பில், சேலத்தில் சித்திரை 05, 2046 / ஏப்பிரல் 18, 2015 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்க நிகழ்வு நடைபெறுகின்றது. மாரி தலம், ஆக்கம், நிழல், தளிர்கள், ஐந்திணை வாழ்வியல் நடுவம், சேலம் பேச்சு ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விவாத நிகழ்வு, சேலம் மூக்கனேரி ஏரிப் பகுதியிலுள்ள, மாரி தலத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது. காலை 10 மணி முதல்…
ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சி தொடக்கவிழா
அன்புடையீர், வணக்கம். உலகத் தமிழரின் உறவுப் பாலமாய் வெளிவரும் ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாய் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். நேரம்: மாலை 6மணி இடம்: இலண்டன் தொகுப்பறை, ஐஎல்இசி மாநாட்டு மையம், 47, (இ லில்லி சாலை, இலண்டன் [London suite, ILEC Conference Centre, 47, Lillie road, London, SW6 1UD] விழா, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி விருந்துடன் நிறைவுறும்….
பிரண்டைத் திருவிழா – பனை ஓலை நுழைவுச் சீட்டு!
சித்திரை 20, 2046 / மே 3, 2045 பனை ஓலையில் நுழைவுச் சீட்டு! நண்பர்களே, பிரண்டைத் திருவிழாவிற்கான நுழைவுச் சீட்டுகளைப் பனை ஓலையில் அச்சிட்டுள்ளோம். பனை மட்டைகளை வெட்டிப், பதப்படுத்தி, வடிவாக நறுக்கி இதை உருவாக்கியுள்ளோம். பிரண்டைத் திருவிழா என்பதே மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் பணிகளுக்கானதுதான். அதன் நுழைவுச் சீட்டு, தொன்மையான நமது பனை ஓலைத் தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் இராச நவநீதகிருட்டிணன் , அவர் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள். பிரண்டைத் திருவிழா முத்திரை (logo) உருவாக்கியவர்: அருண் குமார் பெ…
