தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு   செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் திஇநி பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் ஏழு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 700 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர். தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 8-ஆம் ஆண்டு (2018-2019) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. சூன்…

சுனில் கில்நானியும்  நானும் – சிறப்புரை : சா கந்தசாமி

 விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 36 சுனில் கில்நானியும்  நானும்       (‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற புத்தக ஆசிரியர்)   சிறப்புரை:சா கந்தசாமி சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்குபவர். வைகாசி 05, 2049 /   19.05.2018 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி திருஇராம் குழுமஅலுவலகம்                மூகாம்பிகை வளாகம்                             சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே  ஆறாவது தளம்,      மயிலாப்பூர்      சென்னை 600 004   அனைவரும் வருக! அன்புடன்…

குவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்

குவிகம் இல்லம் – அளவளாவல் சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக் கிழமை – மே 13, 2018 காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை திருமதி தாரிணி கோமல் (நாடக த் தயாரிப்பாளர், இயக்குநர்) அவர்களுடன் அளவளாவல் வெண்பூங்கா அடுக்ககம், தியாகராயர்நகர், சென்னை 17  

தமிழ்ப்பேராய விருதுகள் 2018

தமிழ்ப்பேராய விருதுகள் 2018     திரு இராமசாமி நினைவு அறிவியல்-தொழில் நுட்பக் கல்விநிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு மடல் படவடிவில்  உள்ளது. காண்க.

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தும் உலகத் தமிழ் எழுச்சி மாநாடு சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018 பெரியார் திடல், சென்னை 600 007 பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாநாட்டுப் பொறுப்பாண்மையர்

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்  ஆய்வியல் மாநாடு, பாரிசு

  மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்  ஆய்வியல் மாநாடு பாரிசு   ஆவணி 23 &  24, 2049  சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018     – சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும் – சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்   அன்புசால் தமிழுறவுகளே ! பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049 சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும். பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்) ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய இறுதி…

குவிகம் ஆண்டுவிழா

குவிகம் ஆண்டுவிழா கவிஞர் வைத்தீசுவரனின் ‘சில கட்டுரைகள் – ஒரு  நேர்காணல்’ புத்தக வெளியீடு மின்னூலகம் தொடக்கம் கவிதை வாசித்தல் கதை சொல்லல் சித்திரை 23, 2049 ஞாயிறு மே 6, 2018 மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ்

  அன்புடையீர், வணக்கம். முடிவுநாள்: சித்திரை 22, 2049 –  05.05.2018  உலகத் தமிழ்ச் சங்கத்தின் கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ்    வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு வசதியாக இதோ ஒரு மின்வரி: gangadharan.kk2012@gmail.com   நன்றி. அன்புடன், தில்லை சிதம்பர(ப்பிள்ளை) ஆசிரியர் மின்மினி @mail: minmini.ch@gmail.com  @mail: minmini.nz@gmail.com @mail: au.minmini@gmail.com பேசி : WWWPhone: +41 43 526 70 24 (மீள் அழைப்பு-Call Back)    

குவிகம் இலக்கிய இல்லம் – அளவளாவல்

  சித்திரை 16, 2049 – ஞாயிறு – ஏப்பிரல் 19, 2018 வெண்பூங்கா அடுக்ககம், தியாகராயர்நகர், சென்னை இதழாளர் மொழி பெயர்ப்பாளர் திரு இராசேசு சுப்பிரமணியன் அவர்களுடன் அளவளாவல்

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! -பிரித்தன்

  9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! இன அழிப்புக்கு பொறுப்புக் கோரல்! இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தின் தொன்மையும் செழுமையும் நிறைந்த வரலாறு, பண்பாடு, வாழ்வியல் பதிவுகளைச் சிதைத்து அழித்து எம் மக்களின் நிகழ்கால எதிர்கால அரசியல். சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூட்டு விருப்பத் தெரிவுகளை அழித்தொழித்துத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக வாழ்வதை மறுதலித்துக் கடந்த கால அழிவுகளிலிருந்து என்றுமே மீண்டெழ முடியாத பலவீனமான சமூகமாக கையறு நிலையில்…

உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு

உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறும் உலகக் கவிதைப் போட்டிக்கு படைப்பாளர்களின் அன்பு வேண்டுதலுக்கு இணங்க வைகாசி 13, 2049  27 மே 2018  வரை படைப்பாளர்கள் கவிதை அனுப்பக் கால நீட்டிப்பு செய்யப்பெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகத் தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆனி/ஆடிததிங்களில் – யூலை- 2018 இல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளி, கல்லூரியில் பயிலும்…

இணையவழித் திருத்தப் பயிற்சிக்கு அழைப்பு – சென்னை

அனைவருக்கும் வணக்கம். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 இன் பகுதியாக, ஒரு நாள் தொகுதொடர் (Editathon) நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது.  இதன் மூலமாகக் கல்லூரி மாணவர்கள், த,.தொ.(ஐ.டி) ஊழியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ்த் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள் தன் மொழியில் இருக்க வேண்டியதன் முதன்மைத்துவத்தையும் சார்ந்து விவாதங்கள், உரைகள் நிகழ்த்தவும் முயல்கிறது. இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்துத், தங்கள் கருத்துகளை வழங்கி உதவ வேண்டுகிறோம். நிகழ்வு விவரங்கள்…