ப. பழனிச்சாமி எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா

அன்புடையீர், வணக்கம். 14.01.2018 தைத் திருநாள் முதல்நாளன்று மாலை 3.30 மணிக்குச் சென்னைப் புத்தகக் காட்சி வளாக அரங்கில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்),  மொரிசியசுத் தமிழர் திரு. ப. பழனிச்சாமி அவர்கள் எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. உங்கள் வருகை, தமிழர் நலனையும் பண்பாட்டையும் பேண உழைக்கும் மொரிசியசுத் தமிழர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். அன்புடன் காந்தளகத்துக்காக, சசிரேகா பாலசுப்பிரமணியன்

நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா

நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா மார்கழி 28, 2048 – வெள்ளி – சனவரி 12, 2018  

  2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்     2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் – யாழ்பாவாணன் வெளியீட்டகம் படத்திற்குக் கவிதை எழுதுங்கள் படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவற்றின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள்…

41ஆவது சென்னை புத்தகக் காட்சி

மார்கழி 26, 2048 – தை 09, 2049 சனவரி 10-22, 2018 தூய சியார்சு ஆங்கிலோ இந்தியன்  மேனிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி,  சென்னை 41ஆவது சென்னை புத்தகக் காட்சி திருவள்ளுவர் சிலை திறப்பு போட்டிகள் – பரிசு வழங்கல் பொழிவுகள் பட்டிமன்றம் விருதுகள் வழங்கல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம் சென்னை 600006

இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா – சென்னை

  மார்கழி 24, 2048 திங்கள்  08.01.2018 அறிஞர் அண்ணா பொதுநல மன்றம், ஆர்க்காட்டுச்சாலை,  வடபழனி பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பில் அருட்திரு இயோ.நீலமேகம் தலைமையில் வந்துள்ள இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா

உலகத்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம் , பரிசுப்போட்டிகள்

  தை 22, 2049 ஞாயிறு 04.02.2018 வள்ளுவர் குருகுலம் மேனிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை 600 045 உலகத்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம் பத்தாம் ஆண்டுவிழா பரிசுப்போட்டிகள் அறிவிப்பு தொடர்பாளர் திரு பால.சீனிவாசன், வழக்குரைஞர் பேசி 93805 81129 கவிஞர் புதுகை வெற்றிவேலன் தலைவர், உலக்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரமாவட்டம் பேசி 94445 21773 விசய் மா.இராமமூர்த்தி செயலர், உலக்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரமாவட்டம்

சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா. சென்னை

  மார்கழி 23, 2048 ஞாயிறு சனவரி 07, 2018 சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை 600 033 சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு நிறைவுரை : வே.ஆனைமுத்து

சங்கக்காலத்தமிழரின் சடங்குகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

மார்கழி 20,21, 2048 * வியாழன், வெள்ளி  * சனவரி 4,5, 2018 தமிழ் உயராய்வு மையம் திரு சேவுகன் அண்ணாமலை கல்லூரி   மலேசியா தமிழ் இலக்கியக் கழகம் மலேசியா இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “சங்கக்காலத்தமிழரின் சடங்குகள்”

மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்,குவைத்து

குவைத்து தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேங்கும் மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம் நாள் & நேரம் : மார்கழி 20, 2048 04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்… இடம்: கு.த.ச.(K-TIC) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்து இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய குவைத்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலெனத் திரண்டு வருக! தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!!…

தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப்  போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

 ஆடி 31, 2049 வியாழன் 16.08.2018 சா.இரா.நி.கல்லூரி வளாகம், சாத்தூர் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் சாத்தூர் இராமசாமி(நாயுடு) நினைவுக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப்  போக்குகளும்”      

இரீயூனியன் நாட்டுத் தமிழர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும், சென்னை

  பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து இரீயூனியன்-தமிழக நல்லுறவு குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர். இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் மிக்க நன்றி….