புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம், இலக்கிய நிகழ்ச்சி
மாசி 2048 / மார்ச்சு 05, 2017 பிற்பகல் 3.00 கவியரங்கம் கருத்தரங்கம் த.மகராசன் தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம்
2ஆம் உலகத் தமிழ்எழுத்தாளர் மாநாடு, சென்னை-கலந்துரையாடல்
நாள்: மாசி 19, 2048 / மார்ச்சு 03, 2017 காலை 10.00 , மயிலாப்பூர்
பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்
பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் 1934ஆம் ஆண்டு உருவாக்கிய ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு செல்லப் பாண்டியன் தலைமையில் ‘மாநிலத் தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயருடன் திகழ்ந்தது. ‘பவள விழாக் கண்ட தமிழ்ச் சங்கத்தில்’ இருநூறு உறுப்பினர் செயலாற்றுகின்றனர். இரண்டாவது செவ்வாய்க் கிழமை தோறும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பில் திருக்குறள் ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெறும். காரி(சனி)க்கிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் திருக்குறள் ஒரு தொடர் சொற்பொழிவுகள்…
‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ சென்னையில் நூல் அறிமுக விழா!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதிய ‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ – நூலின் அறிமுக விழா சென்னையில், இன்று (ஞாயிறு /மாசி 14, 2048 /26.02.2017) மாலை 5.30 மணியளவில் நடைபெறுகின்றது. எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெறும் நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்குகிறார். சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. (இ)யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர்…
நீத்தார் நினைவேந்தல் – செந்தாமரை & கருணாகரன்
இலக்கியச்சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு, சென்னை
மாசி 13, 2048 சனிக்கிழமை 25-02-2017 மாலை 6.00 மணி இலக்கியச் சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு ஒரு பதிப்பாளரின் பட்டறிவுகள்: உரையாற்றுநர்: திரு சேது சொக்கலிங்கம் கவிதா பதிப்பகம் தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 23 ஆவது நிகழ்வு “சிறுகதைகள் – அன்றும் இன்றும்” – திரு செ.இரகுநாதன் சீனிவாச காந்தி நிலையம் (காந்தி அமைதி நிறுவம்/Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 அனைவரும் வருக! இலக்கியவாசலின் வலைப்பூ காண அரங்கம் அடைய
“ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம், திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. எதிர்வரும் மாசி 15, 2048 _ 27/02/2017 அன்று தமிழ்த்துறையில் “ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெறுகிறது. சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிட்சர்லாந்து
ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?
“ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?” – 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் – மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி இடம்: ஆசா நிவாசு, 9, இரட்லண்டு வாயில் 5 ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை 6. (நுங்கம்பாக்கம் தாசு உறைவகம் எதிர்ப்பக்க சாலை) [ Asha Nivas, 9, Rutland Gate, 5th Street, Nungambakkam, Chennai, Tamil Nadu 600006. (Opp To Taj Coromandel)]…
சிலப்பதிகாரப் பெருவிழா, சென்னை
அன்புடையீர், வணக்கம். மாசி 15, 2048 / திங்கட்கிழமை / 27-02-2017 காலை 10 மணி முதல் மதியம் 1. 30 மணிவரை, முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை- அறிவியல் கல்லூரி அரங்கில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை – முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை -அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா நடைபெறவுள்ளது. நீதியரசர் வள்ளிநாயகம், நயவுரைநம்பி முனைவர் செகத்துரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை திருச்சி சிவா,பழனி சி. பெரியசாமி, தாளாளர் திருமதி இலதா இராசேந்திரன், கவிப்பேரருவி…
உ(யு)கபாரதி நூல்கள் வெளியீட்டு இருநாள் விழா
உ(யு)கபாரதி நூல்கள் வெளியீட்டு இருநாள் விழா மாசி 12 & 13 2048 / வெள்ளி & சனி / பிப்பிரவரி 24 & பிப்பிரவரி 25, 2017 மாலை 4.30 கவிக்கோ மன்றம், சென்னை 600 004 நேர்நிரை
தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு & கிருட்டிணா இனிப்பகக் கூட்டம்
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகமும் இந்த மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பரம்பரை ஆடைகளையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப்பற்றியும் எடுத்துச் சொல்ல இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம். இலக்கு கிருட்டிணா இனிப்பகம்
அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016
அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016 முடிவு நாள் : பங்குனி 17, 2048 மார்ச்சு 30, 2017 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி : ஞானம், கிளை அலுவலகம், எண் 38, 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
