பாளையங்கோட்டை
மாநிலத் தமிழ்ச் சங்கத்தில்
மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்

 பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் 1934ஆம் ஆண்டு உருவாக்கிய ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு செல்லப் பாண்டியன் தலைமையில் ‘மாநிலத் தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயருடன் திகழ்ந்தது. ‘பவள விழாக் கண்ட தமிழ்ச் சங்கத்தில்’ இருநூறு உறுப்பினர் செயலாற்றுகின்றனர்.

 இரண்டாவது செவ்வாய்க் கிழமை தோறும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பில் திருக்குறள் ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெறும்.

  காரி(சனி)க்கிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் திருக்குறள் ஒரு தொடர் சொற்பொழிவுகள் ‘உலகத் திருக்குறள் மைய’த்தின் சார்பில் நிகழும். ஏழு மணி முதல் தொல்காப்பிய உரை விளக்கம் வழங்கப்படும்.

  ‘தனித்தமிழ் இலக்கியக் கழகம்’ சார்பில் முனைவர் நிருமலா எழுத்தோவியங்கள் பற்றி ஆராயப்படுகின்றது.

  ஞாயிறு தோறும் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை கம்பன் முதலான காப்பியச் சொற்பொழிகள் மூன்று ‘கம்பன் இலக்கியச் சங்க’த்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

  வியாழன் தோறும் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை விவேகானந்தர் மற்றும் அருளியல் சொற்பொழிவும் கலந்துரையாடலும் நிகழும்.

  உரிய ஏற்பாடுகளைப் பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு, முனைவர் வை.இராமசாமி, முனைவர் கு.சடகோபன், திருக்குறள் சுந்தரம், இளமுனைவர் இராசகிளி ஆகியோர் செய்து வருகின்றனர்.

– ‘அருண்மொழிச் செல்வர்’, ‘தமிழ் மாமணி’, ‘திருக்குறள் ஞாயிறு’,
முனைவர் பா.வளன் அரசு,
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை,
தலைவர்,
உலகத் திருக்குறள் தகவல் மையம்,
திருக்குறள் அரசுக் கழகம்,
3, நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை – 627 002.