சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 831. Advantage, Collateral கூடுதல் ஆதாயம் ஓர் ஒப்பந்தத் தரப்பார், தம் வலிமையான பேரம் பேசும் ஆற்றலைப் பயன்படுத்தித் தனக்கு /தமக்கு ஆதாயமான/சாதகமான கூறுகளைச் சேர்த்துக் கொள்வது. பெரும்பாலும் விகிதச் சமமற்ற முறையில் அவருக்கு வழங்கப்படும் நன்மைகளுக்கு மேல் கூடுதலாகப் பெறும் வகையில் விகிதத்தைச் சேர்த்துக் கொள்வது. இவ்வாறு பெறும் கூடுதல் ஆதாயம். 832. Adverse Comment எதிர்மக் கருத்து யாரைப்பற்றியோ / எதைப்பற்றியோ…
சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) 821. Adopted Child மகற்கோடல் குழந்தை மகற்கோடல் என்பது உணர்ச்சி சார்ந்த மன்பதை, சட்டபூர்வச் செயல்முறையாகும். இதன் மூலம், பெற்றெடுத்த பெற்றோரால் வளர்க்கப்படாத குழந்தைகள் மற்றொரு குடும்பத்தின் முழுமையான நிலையான சட்ட உறுப்பினர்களாக மாறுகிறார்கள். அஃதாவது மகற்கோடல் குழந்தையின் அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் மகற்கோடல் பெற்றோருக்கு நிலையாக மாறும். மகற் கோடல் என்பது மகவைக் கொண்ட என்றும் மகவாகக் கொள்ளப்பட்ட என்றும் இரு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காண்க: Adoption…
சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 811. Admiralty Jurisdiction கடலாண்மைப் பணி வரம்பு. கடல்சார் உரிமை கோரல்கள் தொடர்பான பணியாட்சி வரம்பு தொடர்புடைய நீதிமன்றங்களுக்கு இருக்கும். கடலாண்மைப் பணிவரம்பு என்பது கடல்நீர் எல்லை வரை இருக்கும். 812. Admissibility ஏற்புடைமை ஏற்புத்தன்மை ஏற்கத்தக்கத்தன்மை; ஒன்றை – குறிப்பாகச் சான்றினை – நீதிமன்றத்தால் அல்லது உரிய அலுவலரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை. 813. Admissibility Of…
ஆளுமையர் உரை 110 & 111 ; என்னூலரங்கம் வெருளிஅறிவியல் 2/5
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 110 & 111 ; என்னூலரங்கம் நிகழ்வு நாள் : புரட்டாசி 20 , 2055 ஞாயிறு 06.10.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் திருக்குறள் சிந்தனைச்…
ஆட்சியாளருக்கு அவப்பெயர் உண்டாவது அதிகாரிகளாலேயே | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி |
ஆட்சியாளருக்கு அவப்பெயர் உண்டாவது அதிகாரிகளாலேயே | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி | முற்றம் தொலைக்காட்சி
சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 801. Administrative Machinery பணியாண்மை இயங்கமைவு Machinery என்றால் இயந்திரம் என நேர் பொருளில் சொல்வதை விட இயந்திரத்தின் இயக்கம் போன்று இயங்கு நிலையைக் குறிப்பதால் இயங்கமைவு எனலாம். பணியாண்மைக்கான செயற்தொகுதியைக் குறிப்பதே பணியாண்மை இயங்கமைவு ஆகும். 802. Administrative Office பணியாண்மை அலுவலகம் ஒரு துறை அல்லது ஓர் இயக்ககம் அல்லது…
சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!)- இலக்குவனார் திருவள்ளுவன்
சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!) மரு.சுதா சேசையனைச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக அமர்த்திய பொழுது செய்தி ஆசிரியர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார். தெரிவித்தவர், “தமிழறிஞர் அல்லாத ஒருவரை எப்படி நியமிக்க முடியும்? கண்டித்து அறிக்கை வெளியிடுங்கள். வெளியிடுகிறோம்” என்றார். நான் அதற்குத், “தமிழ் தொடர்பான துறை என்றால் தமிழறிஞரல்லாதவர் அல்லது தமிழறியாதவர் அல்லது தமிழரல்லாதவரை அமர்த்துவதுதான் மரபு. இம்மரபைப் பின்பற்றி யுள்ளனர். இதில் கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது” என்றேன். மேலும் “இஃது ஓர் அதிகாரமில்லாத பதவி. இதை அறியாமல் அவர் வந்திருக்கலாம். இவர்…
சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 791. Administration Bond பணியாட்சிப் பத்திரம் பிணை முறி விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட அல்லது நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சொத்துரிமை விண்ணப்பத்தில் நீதிபதியால் கோரப்பட்ட பிணையர்கள் உறுதிமொழி. உடைமையின் பணியாட்சியரால், விருப்புறுதி/இறுதி முறிக்கேற்பச் செயற்படுவதற்கான உறுதி மொழி அளிக்கும் பத்திரம். – இந்திய மரபுரியமையர் சட்டம் 1925(Indian Succession Act, 1925) 792. Administration Of Justice நீதிப் பணியாண்மை நீதிப் பணியாண்மை என்பது அரசின் முதன்மைச் செயல்பாடாகும்….
அயற்சொல் கலப்பு தமிழை அழிக்கவே! – தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்
அயற்சொல் கலப்பு தமிழை அழிக்கவே! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி – முற்றம் தொலைக்காட்சி
தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! – தொல்காப்பிய மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரை
தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் இணைய வழியில் ஆற்றிய தலைமையுரை (புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024– முதல் நாள்) எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் நேரிடையாகவும் இணைய வழியாகவும் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்களே! தமிழன்பர்களே, தொல்காப்பியப் பற்றாளர்களே, அனைவருக்கும் வணக்கம். மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியும் பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டியும் வரும் தொல்காப்பிய மன்றத் தலைவர்…