ஆளுமையர்உரை 101 & 102 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

தமிழே விழி!                                                                               தமிழா விழி!க்குண செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்   (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰உ – 412) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 23, 2055  ****ஞாயிற்றுக் கிழமை ****07.07.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 101 & 102 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கலைமாமணி ஏர்வாடி…

தமிழ் வளர்ச்சித் துறையினருக்குத் தண்டிப்பு அதிகாரம் வழங்கிடுக! | இலக்குவனார் திருவள்ளுவன்

முற்றம் இணையத்தொலைக்காட்சி காணுரை இலக்குவனார் திருவள்ளுவன் விசவனூர் வே.தளபதி தமிழ்வளர்ச்சித்துறையினருக்குத் தண்டிப்பு அதிகாரம் வழங்கிடுக! < https://youtu.be/2PLH2TTllQM >

சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 441 .      accountancy      கணக்கியல் கணக்குப் பதிவியல், வணிகக்கணக்கியல் எனவும் குறிப்பிடுகின்றனர். 442.       accountant         கணக்காளர், கணக்கர் வணிக நிறுவனத்தின் அல்லது அலுவலகத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதிப் பேணுநர். அவை தொடர்பான அனைத்தையும் மேற்கொள்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர். 443.       accountant book             கணக்கேடு கணக்கு பேணப்படுகின்ற புத்தகம். 444.       Accountant…

சிறந்த நூல் பரிசுத் திட்டத்தில் பரிசுகளை உயர்த்திய முதல்வருக்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

(காண்க-சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்) சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிப்புத் திட்டத்தில் நூலாசிரியருக்கும் பதிப்பாளருக்கும் பரிசுத் தொகையை உயர்த்திய அரசிற்கு நன்றி! முதல்வர்,அமைச்சர் பெருமக்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பாராட்டு! பிற வேண்டுகோள்களையும் ஏற்க வேண்டுகோள்! “சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை”  என ‘அகரமுதல’ இதழின் 26.06.2024 ஆம் நாளிட்டஇதழுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். மகிழ்ச்சியான செய்தி. குறுகிய காலத்தில் முதல்வர் வேண்டுகோளில் பரிசு தொடர்பான வேண்டுகோளை ஒரு பகுதி  ஏற்றுள்ளார். கடந்த 26.06.2024 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றக்…

சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 421-430: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 431. Account slip கணக்குத் தாள்   ஓய்வூதியக் கணக்குத் தாள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள், பொதுச் சேமிப்பு நிதிக் கணக்குத் தாள் எனப் பலவகைப்படும்.   குறிப்பிட்ட நிதிக்கணக்கில் செலுத்தப்படும் தொகை, வைப்பு, இருப்பு, வட்டி கடனாக எடுத்திருப்பின் கடன் திருப்பச் செலுத்தி விவரம்,  அக்கணக்கில் முன்பணம் பெற்றிருப்பின் அதன் விவரம் முதலியவற்றைப் பதிந்து அளிக்கும் சீட்டு. 432. account stated விவரிப்புக் கணக்கு  …

சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 411-420 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 421. account of crime, Give an குற்ற வரலாறு கூறு/ கொடு   குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளியின் முந்தைய குற்ற வழக்கு, தண்டனை விவரக்கணக்கைத் தெரிவித்தல். குற்றக் கணக்கு என நேர் பொருளாக இருந்தாலும் வழக்கிலுள்ள குற்றவரலாறு என்பதே சரியாக உள்ளது.   முதல் குற்றவாளியா, வழக்கமான குற்றவாளியா, சட்டவகையிலான குற்றவாளியா, ஒழுக்கக்கேட்டுக் குற்றவாளியா, மனநோய்க்குற்றவாளியா, நிறுவனக் குற்றவாளியா, வெள்ளாடைக் குற்றவாளியா(அழுக்குபடியாமல் குற்றம் செய்பவர்), தொழில்…

சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்

சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை 2023 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்க இருப்பது குறித்துத் தமிழ்வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் 1947 ஆம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1960 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தை தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், விதிமுறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 1972 முதல் தமிழ் வளர்ச்சித்துறை…

சட்டச் சொற்கள் விளக்கம் 411-420: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 401-410 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி சட்டச் சொற்கள் விளக்கம் 411 – 420 411. according to that அதற்கிணங்க அதற்கேற்ப   ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கேற்ப நடைமுறைப்படுத்துவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது. 412. Accordingly   இங்ஙனமே/அங்ஙனமே இதன்படியே/அதன்படியே இவ்வாறே/அவ்வாறே இவ்வண்ணமே/அவ்வண்ணமே ஒருவர் தன்னுடைய வரம்பை அறிந்து அதற்கேற்பச் செயற்படுவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது.. 413. Accost அணுகு அணுகிப் பேசு   தனிப்பட்ட பாதுகாப்பிற்கு எதிராக உடனடி உடல் தீங்கு ஏற்படும் அல்லது குற்றச் செயல் நிகழ…

சட்டச் சொற்கள் விளக்கம் 401-410: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 391-400 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 401-410 401. Accord priority இணக்க முன்னுரிமை   ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் அல்லது இசைவளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுவது. 402. Accordance இணக்கம்   மற்றவரின் கருத்திற்கு, முன்மொழிவிற்கு, விருப்பத்திற்கு, வேண்டுகோளுக்கு உடன்படுதல்.   விதி, ஒப்பந்தம், அறிவுறுத்தம் அல்லது ஆணைக்கிணங்க ஒத்துபோதல். 403. Accordance with the dictates of conscience, In மனச்சான்றின் கட்டளைக்கிணங்க   சரியானவையாக நம்பும் கொள்கைகள்.   மனச்சான்றின் கட்டளையைப் பின்பற்றின்,  ஒருவரின்…

சட்டச் சொற்கள் விளக்கம் 391-400: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 391-400 391. Accompanied by a copy of a record, it shall be ஆவணப்படி யுடன் இஃது இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.   வாதுரையில் அல்லது எதிர் வாதுரையில் உரிய ஆவணத்தின் படி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 392. Accompany உடன்செல்   பின்தொடர் இணை சேர்   இணைந்து செயலாற்று கூட்டாளியாக அல்லது துணையாகச் செல்லல் அல்லது இசைத்தல் அல்லது இயங்குதல். 393. Accompany deafness செவிட்டுத் தன்மை…