பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டுத் தை 20, 2047 / பிப்.03,2016 அன்று இரவு 7.00 மணிக்கு – சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி முதலிய – அனைத்துத் தமிழக வானொலி நிலையங்களிலும் பேரா.முனைவர் இலக்குவனார் மறைமலை நினைவுரை ஒலிபரப்பாகிறது.
ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் – மு. இராமநாதன் உரை
ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் தமிழ்க் கல்வி அறிவுரைஞர் மு. இராமநாதன் உரை ஆங்காங்கு (Hongkong) தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல நேரத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் தேவையைப் பற்றியும் சொல்லலாம் என நினைக்கிறேன். நான் ஆங்காங்கு பொறியியல் கலந்தாய்வு (ஆலோசனை) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில், கிழமைக்கு (வாரம்) ஒருநாள் பகல் உணவு…
தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை
செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்! “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார். தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 தொடர்ச்சி) 09 தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை. பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08 “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே…
பழமொழியில் விளைந்த கனிகள் – இ. சூசை
காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம். தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும் உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை. . இதனைப், பழமொழி நானூறு(51), “நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு” என்கிறது. நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 தொடர்ச்சி) 07 ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 ) செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) 06 “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே…
கலித்தொகையின் கவின்மிகு சிந்தனை – இ. சூசை
இளங்காலைப் பொழுதில் சுறுசுறுப்புடன் இயங்கும் வானொலி நேயர்களே! வணக்கம். நம் முன்னோர்கள் காதல் இலக்கியங்களில் கூட அறம் உணர்த்திய ஆன்றோர்கள் ஆவர். கலித்தொகை என்ற கவின்மிகு இலக்கியத்தில் இதனை நுகர முடிகிறது. தலைவன் பொருளுக்காகப் பிரிந்து செல்கிறான். தலைவி வாடுகிறாள். அப்போது தோழி சொல்கிறாள். “இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு” ஒரு ஆண்மகனிடம், “இல்லை! ஈகை செய்யுங்கள்” எனக் கேட்கும்போது அவன் “இல்லை” என வறுமையில் வாடுவது அவனுக்கு இழிவு. உன் தலைவன் உழைத்துப் பொருள் ஈட்டட்டும் என்கிறாள். “இடன்…
கல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி – இ. சூசை
புலர்காலைப் பொழுதில் சிராப்பள்ளி வானொலியின் செவிநுகர் கனிகளைக் கேட்டுப் புத்தறிவு பெறும் நேயர்களே! வணக்கம். பதினோராம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய ஒப்பற்ற அகநூல் கல்லாடம் சிவபெருமானின் பெருமைகளை, பாண்டிய மன்னனின் சிறப்புகளை இடைஇடையே நுட்பமாகச் செரித்துக் கூறும் இலக்கியம். வருணணை, உவமை, உருவகங்களில் வாழ்வியல் மெய்ம்மைகளைக் கல்லாடம் கூறுகிறது. ‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கொள்ளாதே! எனக் கற்றவரையே எச்சரிக்க வேண்டிய கருத்து வளம், உடையது கல்லாடம். கல்லாடம் என்பது ஊர்ப்பெயர், கல்லாடர் ஆசிரியர் பெயர் கல்லாடம் நூலுக்கு ஆகுபெயராக ஆயிற்று. நேயர்களே! நமக்கு உதவி…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல…
திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் – இ. சூசை
திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் இளங்காலைப் பொழுதில் புதுப்பொலிவோடு செயல்களைத் தொடங்கும் வானொலி நேயர்களே! வணக்கம். இன்றைக்குச் சற்றேக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர் செகவீரபாண்டியனார். கவிராசப் பண்டிதர் என்று உலகம் அவரை அழைத்தது. தூத்துக்குடியில் 1920-களில் தொடங்கி வாழ்ந்தவர். அன்றைய ஆங்கில அரசு அவரின் நூல்களைப் பாடநூலாகக் கல்வி நிறுவனங்களில் வைத்தது. அன்றைய தமிழ் கூறும் உலகில் அவர் புகழோடு இருந்தார். கம்பஇராமாயணத்தை ஆராய்ந்து, கம்பன் கலைநிலை என்று பல…
