கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம், போர்ட்பிளேயர், அந்தமான்

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2015  அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்  நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது. கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கிற்குத் தாங்கள் வருகை…

இயற்கை வேளாண் கருத்தரங்கம், பாலையூர், குத்தாலம்

  தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் திரு. அ.அம்பலவாணன் தலைமையில் நம்மாழ்வார் அவர்களின் 78 ஆவது பிறந்த நாள் விழா பங்குனி 24, 2047 / 06.04.2016 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் குத்தாலம் வட்டத்தில் உள்ள பாலையுரில் நடைபெற உள்ளது.   இவ்விழாவில் இயற்கை வேளாண்மை குறித்தும் நம்மாழ்வாருடைய கொள்கை – திட்டங்களை எடுத்துச் செல்வது குறித்தும் ஒரு விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் நம்மாழ்வார் அவர்களோடு பல ஆண்டு காலம் பணி செய்த முன்னோடிகளும்…

திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கமும் நூல் வெளியீடும்

 திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் தை 24, 2047 / 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்(தரமணி), சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.  இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுசுமித்து பல்கலைக்கழகப் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான திரு.சிவாபிள்ளை, இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.விசாகன், குமாரபாளையம் எசு.எசு. எம். கல்விக்குழுமத்தின் தலைவரும் நடிகர் பிரபு அவர்களின் சம்பந்தியுமான திரு.எம்.எசு.மதிவாணன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. விசயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.   இக் கருத்தரங்கில்,…

“சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – புதுச்சேரி

  பெருந்தகையீர்! வணக்கம். புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம்   பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கின்றது. தங்கள் பங்கேற்பை விரும்பி அழைக்கின்றோம். அறிவன்புடன் திட்ட ஒருங்கிணைப்பாளர். நன்றி!

தேசியம் – தேசப்பக்தி – தேசத்துரோகம் : கருத்தரங்கம்

  பங்குனி 12, 2047 /  மார்ச்சு 25, 2016  மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை மதுரை   அகில இந்தியர் மாணவர் கழகம், மதுரை

தமிழக மலேசியத் தமிழுறவு அறக்கட்டளைச் சொற்பொழிவும் கருத்தரங்கமும்

  பங்குனி 11, 2047 (24.03.2016) வியாழன் காலை 10.30 மணி சென்னை மறவன்புலவு க.சச்சிதானந்தன் பொழிவு: கம்போடியாவில் காரைக்காலம்மையார் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை தமிழக மலேசியத் தமிழுறவு அறக்கட்டளை

நாட்டுப்பாடல்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம்

இந்திய மொழிகளில் ஓலைச்சுவடிகளிலும் பிற எழுத்துப்படிகளிலும் கிடைக்கக்கூடிய   நாட்டுப்பாடல்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம்   பங்குனி 06, – 08, 2047 / மார்ச்சு 19-21, 2016 , சென்னை   அன்புடன் ஆசியவியல் நிறுவனம், சென்னை கையெழுத்துப் படிகளுக்கான தேசியப் பரப்பகம், புதுதில்லி

இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம்,சென்னை

  மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 : காலை 10.00 இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) சென்னை 600 004 தமிழ்த்துறை தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர்  இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி

பெருஞ்சித்திரனார் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு

பெருந்தகையீர்,  அனைவரும் வருக! தமிழ்த்தேசத்தந்தை பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு அனைவரும் வருக! நாள்: மாசி 30, 2047 / 13-3-2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு தலைமை: முனைவர்மா.பூங்குன்றன் வரவேற்புரை: திரு.தழல் தேன்மொழி சிறப்புரை: சொல்லாய்வறிஞர் அருளியார் திரு.அன்புவாணன்,  பொதுச்செயலர்(உ.த.மு.க) நன்றியுரை:  தோழர்.இளமுருகன் ஒருங்கிணைப்பு: தென்மொழி இயக்கம் இடம்: பாவலரேறு தமிழ்க்களம், மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை-100 தொடர்புக்கு: 9444440449, 9443810662.    

அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்

  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.   அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. நன்றி முனைவர் சா.இராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]