நயன்மையை(நியாயத்தை) விட நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்! – நளினி முருகன்
நயன்மையை(நியாயத்தை)விட நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்! – நளினி முருகன் ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 6-ஆம் பகுதி இது. இந்த நூல் பேசுகிறதா? இல்லை, இந்த நூலினுள் நான் பேசுகின்றேனா என்கிற வியப்பு எனக்குள்! என் மீது வீசப்பட்ட கொடிய சொற்கள் எவ்வளவு? குடை சாய்ந்து போகும் அளவுக்குத் திணிக்கப்பட்ட மானக்கேடுகள் எவ்வளவு? என்னை நானே அறியாதபடி என் முகம் முழுக்கக் கட்டுக்கதைகளாகச் சேறு பூசப்பட்டிருந்ததே, ஏன்? என்றோ செத்துப்…
இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 – மு.இளங்கோவன்
இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று தற்புனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது. தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977 இல் தற்புனைவு என்னும்…
சிவராசனைக் கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறை விரும்பவில்லை! – நளினி
சிவராசனைக் கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறை விரும்பவில்லை! – நளினி சொல்லும் உண்மை ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் ஐந்தாம் பகுதி இது. இதில் சிவராசன் பற்றிய பகுதிகள் இடம்பெறுகின்றன: இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சிவராசன் உண்மையில் பிடிக்க முடியாத ஆளா அல்லது பிடிபடாத ஆளா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். எங்களைக் கேட்டால், மிக எளிதாகவே சிவராசனைப் பிடித்திருக்கலாம். வேண்டுமென்றே அவரைப் ‘பிடிக்க முடியாத’…
மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி சில நாள்களுக்கு முன்னர், மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களைப்பற்றித் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் ஒரு நிமிடச் செய்தியில் நினைவு கூர்ந்தார். தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் மயிலையாரும் ஒருவர். மயிலை சீனிவேங்கடசாமி மார்கழி 02, 1931 / 1900ஆவது ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இவரின் கல்வி 10ஆம் வகுப்பு வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. படித்தது பத்தாம் வகுப்பு…
நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்!
4 நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்! ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி எழுதியிருக்கும் நூலின் நான்காவது பகுதி இது. நான் சொன்னதை மிக அமைதியாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. தேவை என்றால் மட்டுமே கேள்வி கேட்டார். அப்பொழுதுதான் எனக்கொரு மன உறுத்தல் ஏற்பட்டது. என்னைப்பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேனே, என்…
இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி
3 இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ என்கிற தலைப்பில் நளினி எழுதியிருக்கும் நூலின் மூன்றாம் பகுதி இது! 19-03-2008 திங்கட்கிழமை. என்னைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்குப் பக்கத்தில் பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண் என்னை உற்றுப் பார்த்தார். அவர் யார் என்று எனக்குத் தெரிந்ததும் எனது நாடி நரம்புகள் தளர்ந்து விட்டன. “நான் பிரியங்கா…
மறக்க முடியுமா? : திருவாரூர் தங்கராசு – எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – திருவாரூர் தங்கராசு “சட்டத்தை எதிர்த்த தோழர்களை எல்லாம் தேடிப்பிடித்து, அவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். 1946இல் இந்தியாவில் மேலாட்சி(டொமினியன்) தகுதியுள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அரசியல் வரையறை அவையின் தலைவராக இராசேந்திரபிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை கூடியது. இந்த அவை , அம்பேத்துகார் தலைமையில் அரசியலமைப்புச்சட்ட வரைவுக் குழுவை அமைத்தது. டி.டி.கிருட்டிணமாச்சாரி, அல்லாடி கிருட்டிணசாமி, கோபால்சாமி…
அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்! – புகழேந்தி தங்கராசு
அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/ ‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான உசாவல் நடத்தப்பட வேண்டும்’ – என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின் இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை. சிங்களப் படையினரின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில், பன்னாட்டு அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே, அந்தத் தீர்மானத்தைத்…
மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி : முகம்மது இராபி
மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி நூறு ஆண்டுகளுக்கு முன்பே மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ஓலைச்சுவடி மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார். பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத் தொடங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை, மாழை(உலோக)த்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை, பனை ஓலை போன்றவற்றை எழுதக் கூடிய பொருட்களாகப் பயன்படுத்தினர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பனை மரங்கள்…
அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’! நளினி மீதான சித்திரவதையின் உச்சக்கட்டம்
(இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் 01 தொடர்ச்சி) ஏண்டி உன்னை அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’! நளினி மீதான சித்திரவதையின் உச்சக்கட்டம் ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் இரண்டாவது பகுதி இது! ‘ஏண்டி உன்னை அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’ என்று சொல்வதே அப்போதைக்கு அவர்களிடம் இருந்த ஓரளவு நாகரிகமான தொடர் எனலாம். அதைவிட இன்னும் கொச்சையாக இருந்தன…
மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – புலவர் குழந்தை அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு சூலை 1ஆம் நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது. இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில்…
தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார் – சுப.வீ.
தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்! விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய்! எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்! நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை! எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய்! மன்னித்துவிடு தந்தையே! நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! – சுப.வீ. சுப.வீ.வலைப்பூ http://subavee-blog.blogspot.in/2012/04/blog-post_983.html
